கடந்த 17வருடங்களாக வெற்றிகரமாக நடைபெற்றுவரும் ‘உதயன் சர்வதேச விருது விழா-2023’ எதிர்வரும் யூன் 18 அன்று கனடா ஸ்காபுறோ நகரில் நடைபெறவுள்ளது. வழமைபோல இலங்கை. தமிழ்நாடு மற்றும் கனடா ஆகிய நாடுகளிலிருந்து தெரிவு செய்யப்பெற்ற வெற்றியாளர்கள் அன்றைய தினம் கௌரவிக்கப்படவுள்ளார். இவ்வருடத்திற்குரிய ‘இனங்களுக்கிடையிலான நல்லுறவு விருது, ஓன்றாரியோ மாகாணத்தின் சிரேஸ்ட அமைச்சர் ஒருவருக்கு வழங்கப்பெறவுள்ளது.
உதயன் விருது விழாவில் வழங்கப்பெறுகின்ற விருதுகளில் ‘இனங்களுக்கிடையிலான நல்லுறவு விருது, மாத்திரம் தமிழர் அல்லாத ஒருவருக்கு வழங்கப்பெற்று வருகின்றது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது-
தகவல்: உதயன் விருது விழாக் குழு