உடுவில் பிரதேசத்திலுள்ள மிகவும் பின்தங்கிய குடும்பங்களை சேர்ந்த மாணவர்கள் பயிலும் பாடசாலையாகிய உடுவில் முருகமூர்த்தி வித்தியாசாலையில் திறன் வகுப்பறையொன்று அனைத்துலக மருத்துவ நல அமைப்பு (IMHO-USA, )மற்றும் இரட்ணம் பவுண்டேசன்(Ratnam Foundation-UK)நிதி அனுசரணையில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
68 மாணவர்களுடன் தரம் ஒன்று தொடக்கம் தரம் பதினொன்று வரையான வகுப்புக்களுடன் இயங்கும் இப்பாடசாலை மாணவர்களை வசதிகளுடன் கூடிய பாடசாலைகளில் பயிலும் ஏனைய மாணவர்களை ஒத்த வகையிலான கற்றல் செயற்பாடுகளில் ஈடுபடுத்தும் நோக்குடன் இவ்வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
மேற்படி இரு அமைப்புக்களும் திறன் பலகைகளை இவ்வாறான பல பாடசாலைகளுக்கு வழங்கி வருவது மட்டுமல்லாது அக்குறித்த பாடசாலை ஆசிரியர்களை சிறந்த வளவாளர்களைக் கொண்டு பயிற்றுவிக்கும் அளப்பரிய செயற்பாடுகளையும் செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
சென்ற பங்குனி 22 ஆம் திகதி இப்பாடசாலையில் இத் திறன் வகுப்பறை அனைத்துலக மருத்துவ நல அமைப்பின் இலங்கைக்கான வதிவிட பணிப்பாளர் திரு சு.கிருஷ்ணகுமார் பிரசின்னத்தில் திறந்து வைக்கப்பட்டது.இந்நிகழ்வில் வலிகாமம் கல்வி வலயத்தின் சார்பில் கணித பாட ஆசிரிய ஆலோசகர் திரு.ஆதித்தன் அவர்கள் மட்டுமல்லாது சில பெற்றோர்களும் கலந்து சிறப்பித்திருந்தார்கள்.
இவ் ஆரம்ப வைபவத்தில் இப்பாடசாலை ஆசிரியர்களின் மாதிரி வகுப்பறைச் செயற்பாடுகள் இமமாணவர்கள்பால் அவர்களினது நேசத்தை வெளிப்படுத்தியது.
இதற்கான பாராட்டுக்களும் நன்றிகளும் விழாவில் கலந்து கொண்ட அனைவராலும் அதிபரு
க்கும் குறித்த ஆசிரியர்களுக்கும் தெரிவிக்க பட்டமை சிறப்பாக குறிப்பிட வேண்டிய அம்சமாக உள்ளது.