ஐபிஎல் தொடரில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் பலம் – பலவீனங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். கடந்த சீசன் மும்பை அணிக்கு மிகவும் மோசமான அனுபவமாக அமைந்தது. 2022-இல் நடந்த போட்டியின்போது மும்பை அணி மொத்தம் விளையாடிய 14 ஆட்டங்களில் 10 –இல் தோல்வியை தழுவியது. இதன் விளைவாக அந்த அணி பாயின்ட்ஸ் டேபிளில் கடைசி இடத்திற்கு சென்றால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதனால் இந்த முறை வெற்றிப் பாதைக்கு அணி திரும்பு என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருக்கிறார்கள்.
மும்பை அணியின் பந்துவீச்சுக்கு தூணாக இருந்த ஜஸ்பிரித் பும்ரா, காயம் காரணமாக இந்த சீசனில் இருந்து விலகியுள்ளார். அவர் இல்லாத சூழலில் மற்றொரு நம்பிக்கைக்குரிய வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் பும்ராவின் இழப்பை சரி செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சீசனில் ரோஹித் சர்மாவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுததினர். அவரது சராசரி 20-க்கும் குறைவாக அமைந்தது. இந்த முறை அணியில் ப்ரெவிஸ், டிம் டேவிட், திலக் வர்மா, இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ் உள்ளிட்ட இளம் ஆட்டக்காரர்கள் அணிக்கு பலம் சேர்ப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இவர்களில் சூர்ய குமாரும், இஷான் கிஷனும் இந்திய அணிக்கான போட்டிகளில் தொடர்ந்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவது ரசிகர்களுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது. ஆடும் லெவெனைப் பொருத்தவரையில் ரோஹித் சர்மா, இஷான் கிஷன், டெவைட் ப்ரெவிஸ், சூர்ய குமார் யாதவ், திலக் வர்மா, டிம் டேவிட், கேமரூன் க்ரீன், ஜோஃப்ரா ஆர்ச்சர், பியூஷ் சாவ்லா, குமார் கார்த்திகேயா, ஹிருத்திக் ஷோகீன் ஆகியோரை கொண்ட அணி பலம் வாய்ந்ததாக இருக்கும் என்று கிரிக்கெட் வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். சமீபத்தில் நடைபெற்ற ஏலத்தில் மும்பை அணி கேமரூன் க்ரீனை ரூ. 17.5 கோடி ரூபாய்க்கு அணியில் எடுத்தது.