(சிரார்த்த திதி: பங்குனி அபர சஷ்டி)
தெருவெல்லாம் கோயில் கட்டிக் கோயில் நிறையச் சாமி வைத்தோம்
பரம்பொருளைக் கசிந்துருகி கால்கடுக்க பாடுகிடந்து கை தொழுதோம்
மனம் போன போக்கெல்லாம் வகைவகையாய் நேர்த்தி வைத்தோம்
அருளேதும் கிடைக்கலையே அம்மா நீ பிரிந்தாயே!
ஓலமும் ஒப்பாரியும் ஒருமித்துத் தரும் காலனைக் கலைத்திட
மயிலேறி அந்தச் சந்நிதி வேலன் கூட வரலல்லையே!
ஏலவே இரந்து கேட்டேன் தேவியவள் சிறிது காலம் வாழ்ந்திட
காலனைத் தடுத்திருத்தி சாமிகள் கண்மணியைக் காக்கலையே!
செல்லாத கோயில்லை கையெடுக்காத சாமியில்லை
ஜீவனுக்காய் நோற்காத நோன்பு நானறிய ஏதுமில்லை
கல்லாகச் சமைந்து நின்று கண்ணீரை நான் சொரிந்தேன்
அவசரமாய் அத்தன் மலர்பாதம் நாடிச் சென்ற மர்மமென்ன!
பல்வகைத் தொண்டுகளைப் பேரன் பேத்திகளோடு உனையெண்ணி
அல்லும் பகலும் அவனியிலே உயிர் பிரியும்வரை செய்திடுவேன்
நல்லவளே என் துணையே வையத்தில் வாழும்வரை உனை மறவேன்
குலவிளக்கே பசுமை நினைவுகளுடன் இருப்பேனுன் அரவணைப்பில்!
துணைவன் நவரத்தினம்
02-04-2023