மன்னார் நிருபர்
30.03.2023
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் சர்வதேச கால நிலை ஆலோசகர் எரிக்சோல்ஹேம் இன்றையதினம் வியாழக்கிழமை(30) மன்னார் மாவட்டத்திற்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
மன்னார் தலைமன்னார் பகுதிக்கு விஜயம் மேற்கொண்ட எரிக்சோல்ஹேம் தலைமன்னார் விஜயத்தின் பின் மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ அவர்களுடன் மன்னார் ஆயர் இல்லத்தில் சிநோக பூர்வ கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.
அதனை தொடர்ந்து மதியம் 3 மணியளவில் மன்னார் செபஸ்ரியார் பேராலயத்தில் அமைந்துள்ள மறைந்த முன்னால் மன்னார் மறைமாவட்ட ஆஜர் இராஜப்பு ஜோசப் ஆண்டகை அவர்களின் நினைவிடத்திற்கு வருகை தந்து அஞ்சலி செலுத்தினார்.
அதனை தொடர்ந்து மன்னார் மறை மாவட்ட ஆயர் இல்லத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட மறைந்த மன்னார் மறை மாவட்ட முன்னால் ஆயர் இராஜப்பு ஜோசப் ஆண்டகை அவர்களின் நினைவு நாள் பேருரை நிகழ்விலும் கலந்து கொண்டு உரையாற்றியிருந்தார்.
குறித்த நினைவுநாள் நிகழ்வில் எரிக்சோல்ஹேம், மன்னார் மறை மாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாடோ ஆண்டகை, திருகோணமலை மறைமாவட்ட ஆயர் கிறிஸ்ரியன் நோயல் இம்மானுவேல் ஆண்டகை, மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் ஸ்ரான்லி டிமேல், வன்னி பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன்,சால்ஸ்நிர்மலநாதன் உட்பட்ட அரச திணைக்களின் தலைவர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது