கனடாவில் நீண்ட காலமாக சிறப்பாக இயங்கிவரும்’ கந்தர்மடம் மக்கள் ஒன்றியம்’ நிர்வாகத்தினர் நடத்திய வருடாந்த ஒன்றுகூடல். கடந்த 25ம் திகதி சனிக்கிழமையன்று மாலை ஸ்காபுறோ பாபா விழா மண்டபத்தில் நடைபெற்றது.
கந்தர்மடத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட பல அன்பர்கள் தங்கள் குடும்பத்தினரோடும் நண்பர்களோடும் அங்கு கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர். கலை நிகழ்ச்சிகள் மற்றும் உரைகள் ஆகியன அங்கு இடம்பெற்றன. அவற்றில் ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும அன்பர்கள் பலர் பங்கெடுத்து பார்வையாளர்களை மகிழ்வித்தனர்.
தொடர்ந்து இடம்பெற்ற மெல்லிசை நிகழ்ச்சியில் பல அன்பர்கள் சிவா குழுவினரின் நேரடியான பின்னணி இசையில் பல பாடல்களைப் பாடி பார்வையாளர்களை மகிழ்வித்தனர்.
குறிப்பாக கந்தர்மடம் மக்கள் ஒன்றியத்தின் முன்னாள் தலைவர் வர்த்தகப் பிரமுகர் கேதா நடராஜா அவர்களும் இனிய பாடலைப் பாடி தனது ஊர் மக்களை உற்சாகப்படுத்தினார்.
தொடர்ந்து கேதா நடராஜாவிற்கு அங்கு சமூகமளித்திருந்த ‘இலங்கை முன்னாள் வர்த்தகர்கள் சங்கத்தின்’ இயக்குனர் சபை உறுப்பினர்கள் அனைவரும் மேடைக்குச் சென்று பொன்னாடை அணிவித்து மகிழ்வித்தனர்.
தொடர்ந்து பல பாடல்களோடு இறுதிவரை ஒன்றுகூடல் நடைபெற்று இனிதே நிறைவுற்றது.
கலைஞர் சோம. சச்சிதானந்தன் பாடல் நிகழ்ச்சிகளை அழகாகத் தொகுத்து வழங்கினார். ‘உதயன்’ லோகேந்திரலிங்கம் மற்றும் தனம் கனகரத்தினம். கண்ணன் உட்பட பலர் பாடகர்கள் பார்வையாளர்களை மகிழ்வித்தனர்.