சிகரம் இசைப் பயிற்சி நிறுவனம் நடத்திய செல்வி பைரவி ஜெயச்சந்திரன் அவர்களின் KEYBOARD TALENT SHOW நிகழ்வு
சிகரம் இசைப் பயிற்சி நிறுவனத்தின் நிறுவனரும் இசைக் கலைஞரும் இசைத்துறை குருவுமாகிய தேசா குகன் அவர்களின் மாணவி செல்வி பைரவி ஜெயச்சந்திரன் அவர்களின் KEYBOARD TALENT SHOW நிகழ்வு கடந்த 25-03-2023 அன்று ஸ்காபுறோவில் அமைந்துள்ள தமிழிசைக் கலாமன்றத்தின் கலா மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்வின் பிரதம விருந்தினராக பவதாரணியின் பாரதி கலைக்கூடத்தின் நிறுவுனரும் இசை ஆசிரியரும் திரைப்பட நடிகருமான மதிவாசன் அவர்கள் அழைக்கப்பெற்றிருந்தார்.
மேலும் சில பிரமுகர்கள் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டிருந்தனர்.
அன்றைய இசைத்திறன் சமர்ப்பண நிகழ்வின் இளம் கதாநாயகி செல்வி பைரவி ஜெயச்சந்திரன் அவர்களின் தந்தை ஜெயச்சந்திரன் அவர்கள் பைரவி நுண்கலைக் கூடத்தின் நிறுவுனரும் குருவும் என்பதும் அத்துடன் இளம் கதாநாயகி பைரவி அவர்களுக்கு புல்லாங்குழல் இசை கற்பித்த செல்வி தேசா குகன் அவர்களும் திரு ஜெயச்சந்திரன் அவர்களுடைய பைரவி நுண்கலைக் கூடத்திின் முன்னாள் சிரேஸ்ட மாணவி என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஒரு முழுமையான இசை விழாவாகவும் கர்நாடக இசையும் மெல்லிசை அல்லது திரை இசை ஆகியன கலந்த ஒரு இனிமையான நிகழ்வாக அன்றைய KEYBOARD TALENT SHOW நிகழ்வு இடம்பெற்றதென்றால் அது மிகையாகாது.
சபையில் பல்வேறு துறைகள் சார்ந்த பிரமுகர்கள் இசைக் கலைஞர்கள் பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் மற்றும் வர்த்தகப் பிரமுகர்கள் என அமைத்து தரப்பினரும் கலந்து இரசித்த ஒரு அற்புத விழாவாக அன்றைய KEYBOARD TALENT SHOW நிகழ்வு இடம்பெற்றதென்பது வெளிப்படையாகத் தெரிந்தது.