The President and Broker of Record, Mr Rajeefe Koneshwaran presented the awards to the successful Agents and Brokers.
கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் இரண்டு விற்பனை முகவர் நிறுவனங்களை நடத்திவரும் திரு ரஜீவ் கோணேஸ்வரன் தலைமையிலான RE/MAX Community Realty Inc நிறுவனம் தனது வருடாந்த விற்பனை விருதுகள் வழங்கும் விழாவை கடந்த 24-03-2023 அன்று வெள்ளிக்கிழமை ஸ்காபுறோ கொன்வென்சன் விழா மண்டபத்தில் சிறப்பாக நடத்தியது.
நூற்றுக்கணக்கான விற்பனை முகவர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொண்ட இந்த விற்பனை விருதுகள் வழங்கும் விழாவில் அழைக்கப்பெற்ற விருந்தினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
சிறந்த விற்பனை பிரதிநிதிகளுக்கான விருது நன்கு அறியப்பெற்றவர்களான சாண் தயாபரன் . சிங்கராஜா. சஞ்சீவன். ஆனந்தன் உட்பட பலர் பெற்றுக் கொண்டனர். அன்றைய தினம் ஏராளமான விற்பனை பிரதிநிதிகள் தங்கள் குடும்பத்தினரோடு கலந்து கொண்டமை இங்கு குறிப்பிடத்தக்கது