(கோண்டாவில் கிழக்கு மற்றும் நவக்கிரி)
தோற்றம் 15-03-1938
மறைவு;- 16-03-2023
அன்பினை அள்ளித் தந்த அருமையான பெற்றோருக்கு புதல்வராய் பிறந்து
அருகினில் சேர்ந்து விளையாடி மகிழ்ந்த சகோதரங்களோடு வளர்ந்து
என்பும் தசையும் போல் மணவாழ்க்கையின் பின் துணைவியை நேசித்து
எல்லயில்லா மகிழ்ச்சியினை பெற்றெடுத்த நற் பிள்ளைகளிடமிருந்து பெற்றீர்
மண்ணையும் மழையையும் நம்பி வாழ்ந்த தொழிலைத் தெய்வமாய் மதித்து
மனதினில் உறுதியொடு வெய்யிலில் உடலை வருத்தி பொருள் சேர்த்து
நன்மை பல தரவல்ல கல்வியினை பிள்ளைகள் பெற்றிட அனைத்தையும் ஆற்றி
நல்ல இடங்களில் அவர்கள் சென்றமர்ந்து பதவிகள் பல பெற்றதை கண்டீர்
இன்முகம் காட்டி அவர்களை ஊக்குவித்து பின்னர் உற்ற துணைகளைத் தேடி
இசைந்தே எம்முடன் வாழ்ந்த உயர்ந்தவரே உங்கள் பிரிவு எம்மை ஊன்றித் தாக்கியது
தங்கள் இழப்பினால் அனைவருமே சந்தோசம் இழந்தோம் நாம் மட்டுமல்ல வரிசையாய்
தவழும் குழந்தை முதல் உலகறியும் வயதுடைய பேரப்பிள்ளைகளும் கதறி நின்றனர்
உங்களைச் சுற்றி வந்த உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அயலவர்கள் என
அனைவருமே ஆழ்ந்த கவலையில் தான். அழுதபடி வந்து எமது ஆறுதல் கூறுகின்றார்
சிங்கத்தை போல தைரியம் கொண்டவராய் திகழ்ந்து எம் குடும்பம் காத்தீர் ஐயா!
சினங்கொள்ள மாட்டாத சிந்தையை உடையவராய் இறுதிவரை எம்முடன் இருந்தீரே!
பொங்கியெழுந்து விடுதலைப்போர் செய்து வீரமரணம் எய்த புதல்வரது வித்துடல் கண்டு
பதட்டமின்றி மார் தட்டி நின்று அதன் மீது கைகளால் மண் தூவிய தீரத் தந்தை நீங்கள்
மங்கியது எங்கள் மனதின் எழுச்சி நீங்கள் மறைந்த நாட் தொடக்கம் மறப்போமா உமை!
மனது குளிர தினமும் எம் கனவுகளில் வந்து காட்சி தாருங்கள் ஐயா அதுவே போதும் எமக்கு!
யாழ். கோண்டாவில் கிழக்கை பிறப்பிடமாகவும், நவக்கிரி, கனடாவை வதிவிடமாகவும் கொண்ட எமது அன்புக்குரிய வைரமுத்து விநாயகமூர்த்தி அவர்கள் 16-03-2023 வியாழக்கிழமை அன்று காலமானார் என்ற செய்தியைக் கேள்வியுற்று நேரிலும் தொலைபேசி மூலமாகவும் எம் இல்லங்களுக்கு வருகை தந்து ஆறுதல் வார்த்தைகளை பகிர்ந்து சென்றவர்களுக்கும் பின்னர் இறுதிக் கிரியைகளில் நேரில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியவர்களுக்கும் மலர்வளையங்களை அனுப்பிவைத்தவர்களுக்கும் உணவு மற்றும் உபசாரங்களை செய்தவர்களுக்கும் மற்றும் பல்வேறு வழிகளில் உதவிகளை வழங்கிய அனைவருக்கும் எமது குடும்பத்தின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
மேலும் 15-04-2023 சனிக்கிழமையன்று பகல் 11.00 மணி தொடக்கம் 733 Birchmount Rd, Scarborough, ON M1K 1R5 என்னும் விலாசத்தில் அமைந்துள்ள கனடா கந்தசுவாமி ஆலய கலாச்சார மண்டபத்தில் நடைபெறவுள்ள எமது அன்புக்குரியவரின் நினைவஞ்சலிப் பிரார்த்தனைகளிலும் தொடர்ந்து நடைபெறவுள்ள மதிய போசனத்திலும் பங்கெடுத்து ஏகுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.!
.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு::-
நிமால் (மகன்- கனடா) 416 888 1128
சாந்தி (மகள்- கனடா) 647 289 6545
வசந்த் (மகன்- கனடா) 647 885 3012