கனடா ‘உதயன்’ பத்திரிகையின் பிரதம ஆசிரியரும் கலந்து கொள்கின்றார்
கனடா மொன்றியால் வாழ் எழுத்தாளர் ‘வீணைமைந்தன்’ -கே. ரி. சண்முகராஜா அவர்கள் எழுதிய மூன்று நூல்களான ‘மண்ணும் மனசும்’. .மறக்கத் தெரியாத மனசு. மற்றும் ‘தமிழ்ச் சினிமாவில் மகாகவி பாரதியாரின் பாடல்கள்’ ஆகியவற்றின் வெளியீட்டு விழா எதிர்வரும் 28-04-2023 அன்று வெள்ளிக்கிழமை மாலை யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தின் நூலக மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் நா. சண்முகலிங்கன் அவர்கள் தலைமையில் நடைபெறவுள்ள இந்த வெளியீட்டு விழாவில் முதன்மை விருந்தினராக தற்போதைய துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறீ சற்குணராஜா அவர்கள் முதன்மை விருந்தினராகவும் கனடா உதயன் பத்திரிகையின் பிரதம ஆசிரியரும் ரொறன்ரோ மனித நேயக்குரல் அமைப்பின் தலைவருமான ஆர். என். லோகேந்திரலிங்கம் சிறப்பு விருந்தினராகவும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
நூல்கள் விமர்சனம் மற்றும் சிறப்புரைகள் ஆகியவற்றை ஆற்றுவதற்காக யாழ்ப்பாண மண்ணில் கல்வி மற்றும் கலை இலக்கியம் ஆகிய துறைகளில் பங்காற்றி வரும் அறிஞர் பெருமக்கள் அழைக்கப்பெற்றுள்ளார்கள்