தந்தை செல்வாவின் 125வது பிறந்த நாள் விழாவில் கனடா பேராசிரியர் ஜோசப் சந்திரகாந்தன் புகழாரம்
ஈழத் தமிழ் மக்களால் மாத்திரமல்ல தமிழ்நாடு மற்றும் மலேசியா போன்ற நாடுகளிலும் வாழ்ந்த தமிழ் மக்களால் ‘தந்தை செல்;வா’ என்று மரியாதையோடு அழைக்கப்பெற்ற மறைந்த தமிழர் தலைவரம் எஸ். ஜே. வி. செல்வநாயகம் அவர்கள் தனது அரசியல் பாதையை உள்ளார்ந்த விடுதலை நோக்கு கொண்டதாக அமைத்துக் கொண்டவர். இதன் காரணமாக சிங்கள பேரினவாதிகள் அவரின் நோக்கங்களை ஏற்றுக்கொள்ளாமல் அவரை புறக்கணித்தார்கள். அத்துடன் சிங்களக் காடையர்களை ஏவிவிட்டு அவரைத் துன்புறுத்தினார்கள். அவ்வாறு துன்பங்களை அனுபவித்திருந்தாலும் தனது அரசியலு; பாதையில் தான் வகுத்துக் கொண்ட கோட்பாடுகளிலிருந்து விலகிக் கொள்ளாமல் இருந்தார்”
இவ்வாறு நேற்று முன்தினம் புதன்கிழமை கனடா ஸ்காபுறோவில் நடைபெற்ற தந்தை செல்வாவின் 125வது பிறந்த நாள் விழாவில் நினைவுப் பேருரை ஆற்றிய பேராசிரியர் ஜோசப் சந்திரகாந்தன் அவர்கள் புகழாரம் சூட்டினார்.
‘தந்தை செல்வா நினைவு அறக்கட்டளை’ அமைப்பு நடத்திய மேற்படி விழாவை தமிழ்த் தேசிய செயற்பாட்டாளரும் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் முன்னாள் தலைவருமான குணநாதன் அவர்கள் தலைமை தாங்கினார்.
தந்தை செல்வா அவர்களின் பேத்தியான மைதிலி அவர்கள் வரவேற்புரையை ஆற்றினார்.
அங்கு உரையாற்றிய பேராசிரியர் ஜோசப் சந்திரகாந்தன் அவர்கள் தொடர்ந்து ” தந்தை செல்வாவின் சிறந்ததும் நேர்மையான தலைமைத்துவப் பண்புகள் கொண்டதுமாக அமைந்த அவரது போர்க்குணத்தை எள்ளி நகையாடினர். சில சிங்களத் தலைவர்களை விட பலரால் நிந்திக்கப்பட்டிருந்தாலும் தனது இலட்சியத்தை கைவிட்டு விடாமல் இறுதிவரை போராடியவர் அவரே! என்று குறிப்பிட்டார்.
கனடா வாழ் நக்கீரன்- தங்கவேல் அவர்களும் தந்தை செல்வா அவர்களின் வாழ்க்கையில் நிகழ்ந்த பல முக்கிய நிகழ்வுகளை எடுத்து விளக்கினார்.
ஒன்றாரியோ மாகாண சபையின் உறுப்பினர் லோகன் கணபதி அவர்களும் தனது உரையை வழங்கிய பின்னர் ‘தந்தை செல்வா அறக்கட்டளை ‘ அமைப்பினரை கௌரவிக்கும் வகையில் பாராளுமன்றம் சார்பான வாழ்த்து மடலை வழங்கினார்.
பின்னர் அங்கு வெளியிடப்பெற்ற தந்தை செல்வா தொடர்பான நினைவலைகள் அடங்கிய நூலின் பிரதிகள் பல அன்பர்களுக்கு வழங்கப்பெற்றன.