நடராசா லோகதயாளன்
இலங்கையில் பரீட்சார்த்தமாக ஒளிபரப்பான சீனத் தொலைக்காட்சி சேவை இம்மாதம் 27ஆம் திகதி வியாழக்கிழமை முதல் நிறுத்தப்பட்டுள்ளது.
இலங்கையில் எந்தவொரு அறிவிப்பும் இன்றி கடந்த 10 தினங்களாக ஒளிபரப்பான சீனத் தொலைக்காட்சியே இவ்வாறு இடைநிறுத்தப்பட்டுள்ளது.
தீவு நாடான இலங்கையின் தொலைக்காட்சிகளில் சீன அலைவரிசை ஒன்று இலவசமாக பரீட்சார்த்த ஒளிபரப்பு சேவையை அண்மையில் ஆரம்பித்திருந்தது. இந்த சோதனை முறையிலான ஒளிபரப்பிற்கு இலங்கை அரசிடமிருந்து முறையான அனுமதி பெறப்பட்டதா என்பது மர்மாகவே உள்ளது. எனினும் நாட்டின் அரச தொலைக்காட்சியின் அலைவரிசைகளில் சீனாவின் இந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி ”சோதனை முறையில்” என்று கூறப்பட்டு ஒளிபரப்பானது.
அந்த சோதனை ஒளிபரப்பில் பன்னாட்டுச் செய்திகள் மட்டுமே இடம்பெற்றாலும், அது தொடர்ந்து முறையான ஒளிபரப்பாகத் தொடங்கும் போது, இலங்கை சார்ந்த விடயங்களும் ஒளிபரப்பாகும் என்றும் அவை தமிழ் மக்களிறிகு பாதகமாக அமையக்கூடும் என்ற கவலைகளும் இருந்தன.
இதில் முக்கியமாக கவனிப்பட வேண்டிய ஒன்று யாதெனில்-சீன ஒளிபரப்பு சேவையான சைனிஸ் குளோபல் ரெலிவிசன் நெற்வேற் அலைவரிசை- கேபிள் இணைப்பு இன்றி ஒளிபரப்பாகியது. அதன் காரணமாக அது நாட்டிலுள்ள அனைவரையும் சென்றடையும் வகையில் இருந்தது.
இலங்கை அரச தொலைக்காட்சிகளான ரூபவாகினி, ஐ ரீவி மற்றும் நேத்ரா ஆகிய ஒரே குழும ரீவிகள் நாட்டில் யூ.எச்.எவ் இல் வெளிவருகின்றன.
இவ்வாறு வெளிவரும் ஒளிபரப்பு சேவையானது கடந்த பெப்ரவரியில் இருந்து அலைவரிசை பங்காளிகளை கோரியிருந்தனர். இதன்போது இந்த சீன ஒளிபரப்பு சேவை அதனை பற்றியிருக்கலாம் என நம்பப்பட்டது.
இலங்கை ரூபவாகினி கூட்டுத்தாபன அலைவரிசைகளிற்கு 5 இடத்தில் அலைவரிசை கோபுரங்கள் உண்டு அவை, கொழும்பு, மடேல்சிம் ( ஊவா) கொக்காவில்.முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் அதற்கான அன்டனா அமைக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாகவே இவ்வாறு இடம்பெற்ற பரீட்சார்த்த ஒளிபரப்பு தெளிவாக இயங்கியது.
இவ்வாறு இயங்கிய சைனிஸ் குளோபல் ரெலிவிசன் நெற்வேர்க் முன்னர் ஓர் தொலைபேசி நிறுவன இணைப்பு மூலம் கட்டண சேவையில் இயங்கியபோதும் இவை அனைத்தும் தற்போது முழுமையாக தடைப்பட்டுள்ளது.
இலங்கைக்கு வெளியே புற நாடு ஒன்றில் இருந்து ஒளிபரப்பாகும் சமயம் செய்மதி அலைவரிசெயூடாக இலங்கைக்கும் கடத்தப்பட்டு இங்கே ஒளிபரப்பப்பியதாக தெரியவரும் இச்சேவை தொடர்பில் இந்தியா அதிக கரிசணை கோண்டு நோக்கிய சமயம் தற்போது அச்சேவை முழுமையாக நிறுத்தப்பட்டு அதே அலைவரிசையில் ஏஸ்.பி.சி என்னும் தொலைக்காட்சி சேவை ஒன்று ஒளிபரப்பாகின்றது.
எனினும் சீனத் தொலைக்காட்சியின் சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதா அல்லது நிரந்தரமாக நிறுத்தப்பட்டுள்ளதா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
இந்த விடயம் தொடர்பில் கடந்த வாரம் கனடா உதயன் பத்திரிகையின் இணையதளத்திலும், அச்சுப்பதிப்பிலும் விரிவான செய்தி வெளியாகியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.