(மன்னார் நிருபர்)
(06-05-2023)
தேசிய வெசாக் தின நிகழ்வுகள் நேற்றைய தினம் (5) யமாலை மன்னாரில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
மன்னார் மதவாச்சி பிரதான வீதி,தள்ளாடி சந்தியில் அமைக்கப்பட்டுள்ள வெசாக் பந்தல் நிகழ்வுகள் இவ்வாறு ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
ஆரம்ப நிகழ்வில் மன்னார் அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டிமேல், மன்னார் பிரதேச செயலாளர் எம். பிரதீப் ,மன்னார் பொலிஸார், தள்ளாடி இராணுவ படைப்பிரிவு அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த பல நூற்றுக்கணக்கான மக்கள் குறித்த பகுதிக்கு இரவு வந்து வெசாக் தோரணங்களை மற்றும் அங்கு இடம் பெற்ற நிகழ்வுகளை கண்டு களித்தனர்.