மன்னார் நிருபர்
(06-05-2023)
தமிழீழ விடுதலை இயக்கத்தின்(ரெலோ) தலைவர் சிறி சபாரத்தினத்தின் 37வது ஆண்டு நினைவு தினம் இன்று மன்னாரில் அனுஸ்டிக்கப்பட்டது.
மன்னாரில் உள்ள தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) காரியாலயத்தில் தமிழீழ விடுதலை இயக்கத்தின் மாவட்ட அமைப்பாளர் எ.ரி.மோகன் ராஜ் தலைமையில் நினைவஞ்சலி நிகழ்வு நடை பெற்றது.
குறித்த நினைவேந்தல் நிகழ்வில் தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) கட்சியின் முக்கிய உறுப்பினர்கள்,ஈ.பி.ஆர்.எல்.எப்.கட்சியின் மாவட்ட அமைப்பாளர் எஸ்.ஆர்.குமரேஸ்,கட்சியின் ஆதரவாளர்கள் என பலரும் அஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இதன் போது தலைவர் சிறி சபாரத்தினம் மற்றும் உயிர் நீத்த போராளிகள் பொதுமக்களை நினைவு கூர்ந்து சுடர் ஏற்றி,மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
. அதனைத் தொடர்ந்து நினைவுப்பேரூரையும் இடம்பெற்றது.