(மன்னார் நிருபர்)
(09-05-2023)
மன்னார்- வங்காலை கடற்பரப்பில் வைத்து டைனமைட்வெடி பொருட்களுடன் கைது செய்யப்பட்ட மன்னார் பகுதியைச் சேர்ந்த 07 மீனவர்களையும் எதிர்வரும் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் இன்று செவ்வாய்க்கிழமை(9) உத்தரவிட்டார்.
மன்னார் வங்காலை கடற்பரப்பில் வைத்து டைனமைட் வெடி பொருட்களுடன் மன்னாரைச் சேர்ந்த 7 மீனவர்களை நேற்று திங்கட்கிழமை (8) வங்காலை பிரதேச கடற்படை கைது செய்து மன்னார் மாவட்ட கடற்தொழில் பரிசோதகர் ஊடாக வங்காலை பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
இதன் போது மீனவர்களிடம் இருந்து இருந்து டைனமைட் வெடி பொருட்களும் மீட்கப்பட்டிருந்தது.
மீன்கள் அற்ற நிலையில் வெடி பொருட்கள் மட்டும் உடமையில் இருந்ததால் வங்காலை பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
வங்காலை பொலிஸார் விசாரணையின் பின் குறித்த மீனவர்களை இன்று செவ்வாய்க்கிழமை(9) மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.
இதன் போது விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் குறித்த மீனவர்களை எதிர்வரும் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.