தயாரிப்பாளர் கனடாவில் தங்கியிருக்கும் நிலையிலும் மிகுந்த ஈடுபாட்டுடன் செயற்படும் ‘FINDER’ திரைப்படத் தயாரிப்புக் குழுவினர்
கனடா வாழ் பன்முகக் கலைஞர் ரஜீவ் சுப்பிரமணியம் அவர்களின் தயாரிப்பில் சென்னையில் இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் மூழ்கியுள்ள இயக்குனர் வினோத் ராஜேந்திரன் தலைமையிலான ‘FINDER’ திரைப்படத் தயாரிப்பு குழுவினரை கனடா உதயன் குழுவினர் நேரடியாகச் சந்தித்து அங்கு இடம்பெறும் படப்பிடிப்பு மற்றும் எடிட்டிங் தொடர்பான விடயங்களை கண்டும் களித்தும் வந்துள்ளனர்.
மேற்படி ‘FINDER’ திரைப்படத் தயாரிப்பாளர் ரஜிவ் சுப்பிரமணியம் அவரம்கள் கனடாவில் தொழிலதிபராக விளங்குகின்றார். ஆனால் திரைப்பபடத் தயாரிப்பில் கொண்ட ஆர்வம் காரணமாக அனுபவமிக்க இளம் இயக்குனராக விளங்கும் வினோத் ராஜேந்திரனை இயக்குனராகக் கொண்டு ‘FINDER’ திரைப்படத்த தயாரிக்க முடிவு செய்தார்.
அவர் கனடாவில் தங்கியிருக்கும் நிலையில் மிகுந்த ஈடுபாட்டுடன் செயற்படும் ‘FINDER’ திரைப்படத் தயாரிப்புக் குழுவினர் படப்பிடிப்பு மற்றும் இறுதிக் கட்ட வேலைகள் தொடர்பாக தினமும் தயாரிப்பாளர் ரஜீவ் சுப்பிரமணியம் அவர்களுக்கு தகவல்களையும் முன்னேற்றங்களையும் அனுப்பி வருகின்றனர்.
இந்த வகையில் அண்மையில் சில நாட்கள் சென்னையில் தங்கியிருந்த கனடா உதயன் பிரதம ஆசிரியர் மற்றும் அவரது குழுவினர் மிகுந்த ஈடுபாட்டுடன் செயற்படும் ‘FINDER’ திரைப்படத் தயாரிப்புக் குழுவினரைச் சந்தித்தனர். சில நாட்கள் இவர்களின் சந்திப்பு இடம்பெற்றது.
ஆரபி புரொடக்ஷன் நிறுவனர் ரஜிவ் சுப்ரமணியம் இணைந்து தயாரிக்கும் திரைப் படமான ‘FINDER இன் கதையானது, நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு திரில்லர் சார்ந்த வகையில் உருவாகிறது.
சென்னையைப் பின்னணியாகக் கொண்டு அமைக்கப்பட்ட கதை,யாக இருந்தாலும், அமெரிக்காவில் உள்ள ஒரு அமைப்பு, அவர்கள் செய்யாத குற்றங்களுக்காக நீண்ட காலமாக சிறையில் இருப்பவர்களைக் கண்டுபிடித்து, அவர்கள் நிரபராதி என்று நிரூபித்து, இழப்பீடு பெறும் ஒரு நிஜ வாழ்க்கைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது.
இயக்குனரம் வினோத் ராஜேந்திரன் இயக்கி வரும் இந்தப் படத்தில் பட முக்கிய நடிகர்கள் நடித்துள்ளனர். திரைப்படத்தை ரசிக்கும் வகையில் பார்வையாளர்களை இருக்கையின் நுனியில் வைத்திருக்கும் ஒரு இறுக்கமான திரைக்கதையுடன் பின்னிப் பிணைந்துள்ளது. கதையில் திருப்புமுனையாக அமையும் இந்த படத்தில் நடிகர் சார்லி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
அத்துடன் நடிகர்கள் சென்ட்ராயன் , அபிதா , அபிலாஷ் , கோபிநாத், தரணி , பிராணா மற்றும் பலர் நட்சத்திர பட்டாளத்தில் ஒரு அங்கம். படத்தின் பூஜை மற்றும் தலைப்பு வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடிகர்கள் மற்றும் படக்குழுவினர் முன்னிலையில் நடந்தது. சென்னை மற்றும் பல இடங்களில் இரண்டு ஷெட்யூல்களாக படப்பிடிப்பு நடைபெற்றது.
மிகுந்த பொருட் செலவில் செட்கள் போடப்பட்டு நீதி மன்றம் மற்றும் சிறைச்சாலை ஆகியவை சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டன.
இது தொடர்பாக கனடா உதயன் பிரதம ஆசிரியர் மற்றும் அவரது குழுவினருக்கு விளக்கமளித்த இயக்குனர் வினோத் இராஜேநதிரன் அவர்கள். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் இதர விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் எனவும் இலங்கை மற்றும் கனடா அமெரிக்கா போன்ற நாடுகளிலும் இந்த திரைப்படம் அதிகளவில் திரையிடப்படும் என்றும் தெரிவித்தார்