(மன்னார் நிருபர்)
(11-05-2023)
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டு வரும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் செயற்றிட்டம் மூன்றாவது நாளாக இன்று (11) காலை 9 மணியளவில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை முன்பாக இடம் பெற்றது.
இதன் பொழுது மன்னார் மாவட்டத்தில் உள்ள வர்த்தக நிலையங்கள்,வீடுகளுக்கு சென்று அரிசி விறகு என்பன திரட்டப்பட்டு முள்ளிவாய்க்கால் கஞ்சி ஆக்கப் பெற்று பொது மக்களுக்கு விநியோகிக்கப்பட்டது.
இனப்படுகொலை இடம் பெற்ற வேலை மக்களின் அடிப்படை ஆதாரமாக காணப்பட்ட முள்ளிவாய்க்கால் கஞ்சி தொடர்பான துண்டு பிரசுரமும் விநியோகிக்கப்பட்டது.
அதிகளவான மக்கள் உணர்வுபூர்வமாக கலந்து கஞ்சியை அருந்தி சென்றனர்.