எதிரிகளுக்கு கொள்ளி வைக்கும் நாள், எந்நாள்?
-நக்கீரன்
இந்த உலகின் தொல்குடியினரான தமிழ் மக்களுக்கு, குறிப்பாக ஈழத் தமிழ்க் குலத்திற்கு அநீதியையும் கொடுமையையும் இழைத்த பகைக் கூட்டத்திற்கு கொள்ளி வைக்கும் நாள் என்று வாய்க்குமோத் தெரியவில்லை.
இலட்சக் கணக்கான தமிழ் மக்கள் பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாகிய அத்தியாயத்தின் 14-ஆவது நினைவு நாள் இன்று!
எதை நினைப்பது? எதை மறப்பது என்று ஒன்றும் புரியவில்லை.
முள்ளி வாய்க்கால் துயர அத்தியாயத்தின் நேரடிப் பகை சிங்களம் என்று மேலோட்டமாகத் தெரிந்தாலும், இதில் பொதிந்துள்ள நெடுங்கால உட்பகை, ஆரியம் என்னும் பார்ப்பனியம்தான்.
தமிழனின் மொழி அழிய வேண்டும்; தமிழினமே சிதைய வேண்டும்; அவர்களுக்கென்று ஒரு நாடு உருவாகிவிடக்கூடாதென்று நம் இனத்தின் ஆயிரங்காலத்துப் பகையான பார்ப்பனியம் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆற்றிவரும் காரியம் இதுவரை வெற்றி பெற்றுள்ளது.
தமிழர்தம் மொழி, ஆரசியல், பொருளாதாரம், ஆன்மிகம் உள்ளிட்ட அனைத்துக் கட்டமைப்புகளையும் ஆரியம் சிதைத்துதான் வருகிறது.
முள்ளி வாய்க்கால் முற்றுகையில் புதுடில்லிக்கு குயுக்தியுரை வழங்கிய தற்போதைய கேரளத்தையும் ஆதித்த சோழனை மறைந்து நின்று நச்சு ஆயுதத்தால் கொன்ற அன்றைய கேரளத்தையும் இணைத்துப் பார்க்க வேண்டியுள்ளது.
இரண்டிலும் ஆரியம் கலந்துள்ளது.
ஈழத் தமிழர்களுக்கு எதிரான சிங்களக் கொடுமைக்குத் துணைபோன ரஷ்யாவும் யுக்ரெய்னும் இப்பொழுது ஆண்டுக் கணக்கில் மோதிக் கொண்டாலும் தமிழரை எதிர்ப்பதில் இந்த இருவரும் இணைந்தது எப்படி?
ஈழ விடுதலைப் போரில், சிங்களத்திற்கு துணைநின்ற இந்தியம், கடைசிக் கட்டத்தில் நேரடியாகவே களமிறங்கியது. இதற்கும் துணை போனது கேரளக் கடற்கரை.
பார்ப்பனீய மேலாதிக்கம் மிக்க இந்தியாவின் தமிழ்ப் பகையைப் புரிந்துகொள்ள முடிகிறது; பிரிட்டிஷ் இந்தியாவில் இருந்து மதத்தைக் காட்டி பிரிந்துபோன பாகிஸ்தானமும் ஈழத் தமிழர்களுக்கு எதிராக ஏன் களம் இறங்கியது? எந்தத் தொடர்பும் இல்லாத சீனமும் இதில் சிங்களத்திற்காக அணிவகுத்தது எதனால்?
உலக இனங்கள் அத்தனைக்கும் ஈழ தேசமும் தமிழினமும் பகையா?
இதை யெல்லாம் வகையாகக் கட்டமைத்தது-கட்டமைப்பது பார்ப்பனியம்.
தமிழ் நாட்டை தமிழ் நாடென்று சொல்லக்கூடாதென்று தமிழ் நாட்டிற்கு அடைக்கலமாக வந்துள்ள பீகாரி பார்ப்பனன்கள் இன்றைக்கு சொல்கிறான்கள் என்றால், தினவெடுத்த இந்த மண்டைக் கொழுப்பு எங்கிருந்து வந்தது?
நாடுகளின் நாடான இந்தியா என்னும் கட்டமைப்பை ஆங்கிலேயர்கள் உருவாக்குவதற்கு ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே உருவான நாடு, தமிழ் நாடு என்பது இந்த மர மண்டைகளுக்கு உறைக்காமல் போனது எப்படி?
அன்றையத் தமிழ் நாட்டிலிருந்து புறப்பட்ட தமிழனின் கடற்படை இலங்கை, ஜாவா- சுமத்ரா உள்ளிட்ட இந்தோனேசியா, மலேசியா, சிங்கப்பூர் உட்பட பத்துக்கும் மேற்பட்ட நாடுகளைக் கைப்பற்றி ஆங்காங்கே அதிகார பீடத்தை நிறுவியதை யெல்லாம் வகையாக மறைத்துவிட்ட ஆரிய வஞ்சகக்கூட்டம், புது டில்லியில் இன்று கொலு கொண்டிருப்பதால் அதிகமாக படமெடுத்து ஆடுகிறது.
இந்தக் கூட்டம், இப்பொழுது தமிழகக் கடலோரத்தையும் ஈழத்துக் கடற்பரப்பையும் அபகரிக்கப் பார்க்கிறது. இரு நிலத்து மீனவர்களின் வாழ்வையும் குலைத்து வருகிறது.
தலைவர் மேதகு பிரபாகரனின் வீழ்ச்சி மட்டுமல்ல; திராவிட மறவன் சர் ஏ.டி. பன்னீர் செல்வம் ஏமன் கடற்கரையில் காணாமல் போனது; ஆன்மிகத்தையும் பகுத்தறிவையும் ஒன்றாக கைக்கொண்ட வள்ளலார் அடிகள், சாதி-மதமற்ற சமத்துவத்தை நிர்வாகத்தில் நடைமுறைப்படுத்திய ஆஷ் துரை; சிவநேசப் பயணத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திய நந்த நாயனார் தீயில் கருகியது; சைவ நெறி நின்று நாயன்மார் புலவர் பெருமக்கள் பாடிய திருமுறைப் பாடல்கள் பதிக்கப்பெற்ற ஓலைச் சுவடிகளை இறைவன் குடிகொண்டுள்ள சிதம்பர சன்னிதானத்திலேயே கரையான் திண்ணக் கொடுத்தது என எல்லாவற்றிலும் வெற்றி கண்ட பார்ப்பனியம், ஈழ தேசத்திலும் வெற்றிக் கொடி நாட்டியுள்ளது.
கை-கால் என உடற் பாகங்களை இழந்து உயிர் துறந்த ஈழத் தமிழர்கள், ஊணும் நீரும் இன்றி தொண்டை வற்றி உடல் வதங்கி மண்ணில் சரிந்தவர்கள், மருத்துவமனை-வழிபாட்டுத் தலங்களில் குண்டு மழைக்கு ஆளானோர்; போர் முனையிலும் பொது இடங்களிலும் கொத்து குண்டுகளுக்கும் இரசாயன ஆயுதங்களும் ஆளாகி உயிர் துறந்தவர்கள் என்றில்லாமல் குற்றுயிரும் கொலையுருமாக இருந்தவர்களையும் சேர்த்து மண்வாரி இயந்திரங்களின் மூலம் மண்ணுக்கு இரையாக்கியக் கொடுமையை சிங்கள பேரினவாதம்-பார்ப்பன வஞ்சகத்துடன் உலக சமூகமும் கூட்டுசேர்ந்து நிறைவேற்றி 14 ஆண்டுகள் முடிந்துவிட்டன.
போர்க்குற்றத்தில் பச்சையாக ஈடுபட்ட சிங்கள கொடிய ராணுவத்திற்கு எதிராக ஒரு சிறு துரும்பைக் கூட உலக சமூகம் அசைக்கவில்லை;
காலம் கடந்து செல்கிறது; முள்ளி வாய்க்கால் அத்தியாயம் 15-ஆவது ஆண்டி எட்டி நிற்கும் இந்த வேளையில், ஈழத் தமிழ் மக்கள் படுகொலைக்கும் அந்த முள்ளிவாய்க்கால் அத்தியாயத்திற்கும் சேர்த்து தமிழினப் பகைக்கு கொள்ளி வைக்கும் நாளை தமிழ்த் தாய் எப்பொழுது உருவாக்கப் போகிறாள்?
காத்திருப்போம்!!