தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் இன்று வியாழக்கிழமை(18) காலை 8 மணியளவில் மன்னார் பஜார் பகுதியில் அனுஷ்டிக்கப்பட்டது.
-இதன் போது முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டதோடு நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.
தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் மத தலைவர்கள் மக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இதன் போது இறுதி யுத்தத்தில் முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்த மக்களை நினைவு கூர்ந்து சுடர் ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
இதேவேளை வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் வடக்கு கிழக்கில் உள்ள 8 மாவட்டங்களில் இன்றைய தினம்(18) முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இடம் பெற்றது.
இந்த நிலையில் மன்னார் மாவட்டத்தில் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் மெசிடோ நிறுவனத்தின் அனுசரணையில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன் தமிழின படுகொலை அஞ்சலி நிகழ்வுடன் முள்ளிவாய்க்கால் கஞ்சியும் வழங்கி வைக்கப்பட்டது
அஞ்சலி ஏற்பாடு செய்யப்பட்ட பகுதிகளில் தமிழின படுகொலை நினைவு நாள் மே-18 எனும் தொனிப்பொருளில் பதாகை காட்சிப்படுத்தப்பட்டு வெள்ளைக்கொடி மற்றும் வெள்ளை நிற தோரணங்கள் பறக்கவிடப்பட்டுள்ளது.
இதன் போது முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த மக்களை நினைவு கூர்ந்து சுடர் ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
குறித்த நினைவேந்தல் மற்றும் கஞ்சி வழங்கும் நிகழ்வில் மெசிடோ நிறுவனத்தின் பணிப்பாளர் ஜாட்சன் பிகிராடோ மற்றும் மெசிடோ நிறுவன பணியாளர்கள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
மேலும் மன்னார் எழுத்தூர் மற்றும் தலைமன்னார் பகுதிகளிலும் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.