1948ம் ஆண்டுக்கு பின்னர் இலங்கையை தொடர்ச்சியாக ஆண்டு வந்தஇனவாத சிங்கள கட்சிகளின் ஆட்சிகள் எமது தமிழ் மக்களை அடக்கியும் ஒடுக்கியும் கொலை செய்தும் உடமைகளைக் கொள்ள அயடித்தும் துன்புறுத்தி வந்து பின்னர் எமது இனம் சார்ந்த விடுதலைப் போராட்டத்தின் உக்கிரத்தை சகித்துக் கொள்ள முடியாமல் ‘உலகை’ நோக்கி வேண்டும் விடுத்தன. ‘தமது நாட்டையும் நாட்டின் இறைமையையும் காப்பாற்றுங்கள்’என்று
2009ம் ஆண்டு உலகத்தின் பல திக்குகளிலும் உள்ள பல அரசுகள் நியாயமான எமது விடுதலைப் போராட்டத்தை அழித்தொழிக்கவும் மக்களைக் கொன்று குவிக்கவும் அந்த மாங்கனித்தீவில் வந்திறங்கின.
அப்போது மாதங்கள் சில எமது வீரம் செறிந்த மண்ணில் கபடத்தனமான யுத்தம் இடம்பெற்றது மாத்திரமன்றி. கோரூரமான இனப்படுகொலைகளும் இடம்பெற்றன. எமது தீரம் நிறைந்த விடுதலைப் போராளிகளையும் போராட்ட அமைப்பையும குழந்தைகளையும் பெண்களையும் இரக்கமின்றி கொன்று குவித்த உலக வல்லழரசுகளும் சிற்றரசுகளும் எமது தேசத்தை சிதைத்து விட்டு அங்கிருந்து வெளியேறின.
அன்றிலிருந்து நேற்று வரை 14 ஆண்டுகள் எமது மக்கள் தங்களுக்கு இழைக்கப்பெற்ற இனப்படுகொலைக்கான நீதியை வேண்டியும் இலங்கை அரசை தண்டிக்கவும் யுத்தக் குற்றங்களில் ஈடுபட்ட இராணுவக் கொடியவர்களை குற்றவாளிக் கூண்டுகளில் நிறுத்தவும் தொடர்ச்சியான போராட்டங்களை நடத்தி வந்தன.
ஆனால் இந்த வருடத்தில் எமது மக்கள் உலகெங்கும் கூடி நின்று உரத்துக் குரல் எழுப்பிய வண்ணம் எழுச்சி கொண்டதால் உலகின் எட்டுத் திக்குகளில் ஈழத் தமிழர் இனப்படுகொலையை கண்டித்து நீதிக்காகக் குரல் கொடுத்த மனித குலம் பல தளங்களில் நின்று எமது மக்களின் வேண்டுகோள்களை ஏற்பதாகவும் குற்றமிழைத்த இலங்கை அரசும் அதன் தலைவர்களும் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்பதை உறுதியாக ஏற்றுக்கொண்டன.
கனடா. இங்கிலாந்து. அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலும் இந்த மாற்றம் நன்கு புலப்பட்டுத. இந்த மாற்றத்தை எமது மக்களும் அமைப்புக்களும் நன்கு பயன்படுத்த வேண்டிய பொறுப்புக்களைக் கொண்டவர்களாக காணப்படுகின்றனர்.
இதேவேளை. இந்த வருடத்தின் மே-18 நினைவு நாள் தொடர்பாக தனது உள்ளக் கிடக்கைகளை அறிக்கை வடிவில் தந்துள்ள கனடாவின் நாடுகடந்த தமிழீழ அரசின் முக்கிய உறுப்பினரான நிமால் விநாயகமூர்த்தி அவர்கள் குறிப்பிட்டுள்ள கீழ்க் கண்ட வரிகளை நாம் மிகவும் கவனமாக நோக்க வேண்டும். அவற்றை எமது மக்கள் மத்தியில் எடுச்துச் செல்ல வேண்டும்.
நுpமால் விநாயகமூர்த்தி அவர்கள் எழுதுகின்றார் ‘நமது மக்கள் வாழ்வே போராகவும், போரே வாழ்வாகவும் வாழ்பவர்கள். எந்த ஒரு நெருக்கடியிலும் எமது விடுதலை வேட்கை குறையாமல் தமிழீழ மண் மீட்பில் தொடர்ந்து பயணித்தவர்கள். இன அழிப்பின் பின்னரும் எமது இறைமையை மீட்பதற்கு உரிமைக்குரல் எழுப்பி வருபவர்கள். தமிழர் தேசத்தின் விடுதலைக்காக ஆகுதியானவர்களையும், மக்களையும் மனதில் நிறுத்தி உறுதிபூணும் நாளிது. அவர்களின் தியாகத்திற்கான காணிக்கை செலுத்த வேண்டிய பொறுப்பு, நம் அனைவருக்குமுண்டு.
அவர்களின் தியாகம் வீணாகாவிடாமல் பாதுகாப்பதற்காக, நம்மால் முடிந்த அனைத்தையும் செய்வதுதான், அவர்களுக்கான உண்மையான அஞ்சிலியாகும். அஞ்சலித்தல் என்பது, செயலுக்கான உரம் என்பதை மனதில் நிறுத்த வேண்டிய நாளிது. முள்ளிவாய்க்கால் நினைவுநாளான மே 18 யை தமிழீழ தேசிய துக்க நாளாக அனுஷ்டிப்பது, எமது தமிழீழ தேசிய உயிர்ப்புணர்வை வலுப்படுத்தும் ஒரு நிகழ்வாக அமைகிறது.
தாயகத்தின் ஜனநாயக வழிப் போராட்டங்கள், ஜக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஊடான அழுத்தங்கள், சர்வதேச சமூகத்தின் கரிசனைகள் – எனப், பல்வேறு விடயங்கள் இந்தக் காலப்பகுதியில் இடம்பெற்றிருக்கின்றன. எனினும் நாம், நமது மக்களுக்காக எதிர்பார்த்த சுதந்திர வாழ்வை நெருங்குவதற்கான நம்பிக்கை இப்போதும் மங்கலாகவே இருக்கின்றது. எமது மக்களிள் வாழ்வை சூழ்ந்து அச்சுறுத்தும் சிங்கள-இருள் சிறிதும் அகலவில்லை.’
இலங்கை அரசின் மீதான குற்றச்சாட்டுக்களை நன்கு வரிசைப்படுத்தி மிகவும் அழுத்தமான வகையில் குரல்களை எழுப்பி செயற்பட வேண்டும் என்பது சிங்கள இருள் என்று நிமால் விநாயகமூர்த்தி அவர்கள் குறிப்பிட்டுள்ளதையும் நாம் எமது பக்கத்தில் சுட்டிக்காட்டியதையும் அவசியமாக நாம் நிஜமாக்கும் வகையில் உலகத் தமிழர்கள் இணைந்து செயற்பட வேண்டும்.