கனடா- ஆரபி படைப்பகம் அன்னையர் தினத்தன்று நடத்திய வெற்றிகரமான ‘கருவறைக் கோவில்’ எனும் கருணையும் கலையும் நிறைந்த விழா
கனடாவில் தொழிலதிபர் ரஜீவ் சுப்பிரமணியம் அவர்களின் நிர்வாகத்தில் இயங்கிவரும் – ஆரபி படைப்பகம் என்னும் அமைப்பு கடந்த சில வருடங்களாக கனடிய தமிழர் சமூகத்தில் தனது முகத்தை காட்டி நின்றவண்ணம் பல நிகழ்வுகளுக்கும் சமூகம் சார்ந்த விழாக்களுக்கும் தனது ஆதரவை வழங்கி வருகின்றது. அத்துடன் தற்போது சென்னை மிகுந்த பொருட் செலவில் ‘ ‘ என்னும் முழு நீளத் திரைப் படத்தை அனுபமுள்ள இயக்குனர் வினோத் ராஜேந்திரன் அவர்களின் இயக்கத்தில் தயாரித்து வருகின்றது. தொழிலதிபர் ரஜீவ் சுப்பிரமணியம் இதற்காக தனது பொருளையும் நேரத்தையும் செலவளித்து வருகின்றார்.
இந்த வருடத்திற்கான அன்னையர் தினத்தன்று தொழிலதிபர் ரஜீவ் சுப்பிரமணியம் அவர்களின் நிர்வாகத்தில் இயங்கிவரும் – ஆரபி படைப்பகம் நடத்திய வெற்றிகரமான ‘கருவறைக் கோவில்’ எனும் கருணையும் கலையும் நிறைந்த விழா சபையோரால் நன்கு பாராட்டப்பெற்ற விழாவாக அமைந்தது. அன்றைய தினம் அங்கு கலந்து கொண்ட அனைத்து அன்னையர்களையும் மலர்க் கொத்து கொடுத்து வரவேற்று தொடர்ந்து ஒவ்வொரு அன்னைக்கும் சேலைகளும் வழங்கப்பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.
விழாவில் இறுதி வரை ‘ஆரோசை’ இசைக்குழுவில் இசை நிகழ்ச்சி தொடர்ந்து இடம்பெற்றது.
விழாவிற்கு ஆதரவு வழங்கிய வர்த்தக அன்பர்கள் மற்றும் ஊடக நண்பர்கள் அனைவரும் மேடைக்கு அழைக்கப்பெற்று கௌரவிக்கப்பெற்றனர்