கொலராடோவில் உள்ள அமெரிக்க விமானப்படை பயிற்சிக் கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் சான்றிதழ்களை வழங்கும் சமயம் தடுமாறி விழுந்த ஜனாதிபதி ஜோ பைடனை உடனடியாக தூக்கி நிறுத்தினார்கள் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர்கள்
.இந்த சம்பவம் நேற்று முன்தினம் இடம் பொற்றது.அமெரிக்க வரலாற்றில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் மிக வயதான ஜனாதிபதி ஜோ பைடன். இந்த நிலையில் கொலராடோவில் அரச நிகழ்ச்சி ஒன்றில் மேடையில் தடுமாறி விழுந்த ஜோ பைடனை துரிதமாக செயல்பட்ட விமானப்படை அதிகாரிகள் உதவியுள்ளனர்.
ஆனால் தடுமாறி விழுந்த சம்பவம் இடம்பெற்ற பின்னர் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள்; சூழ்ந்து நடந்து வர , உதவி ஏதுமின்றி, அவர் நடந்து சென்று தமது இருக்கையில் அமர்ந்தார். விழாவின் போது சுமார் ஒன்றரை மணி நேரம் ஜனாதிபதி ஜோ பைடன் நின்ற நிலையில் 921 பேர்களுக்கு பட்டமளித்துள்ளதுடன் அவர்களுடன் கைகுலுக்கி பாராட்டியுள்ளார். எனவும் இதனால அவர் களைப்;படைந்திருக்கலாம் என்றும் ஊடகவியலாளர்கள் தங்கள் பக்கங்களில் பதிவிட்டுள்ளனர்.
இந்த நிலையில், வெள்ளைமாளிகை அதிகாரிகள் வெளியிட்ட தகவலில், ஜனாதிபதி நலமாக இருக்கிறார் என்றும் பாதிப்பு ஏதுமில்லை என குறிப்பிட்டுள்ளனர். விழா நடந்த மேடையில் மணல் மூட்டைகள் இருந்ததால் அவற்றில் ஒன்றில் கால் தடக்கி ஜனாதிபதி பைடன் அந்த மணல் மூட்டை ஒன்றில் மிதித்து கால் தடுமாறி விழுந்துள்ளார் என்றே வெள்ளை மாளிகை ஊடகப் பிரிவினர் தெரிவிக்கின்றனர். ஜனாதிபதி பைடன் தடுமாறி விழுந்த சில நிமிடங்களில் விழாவின் அனைத்து நிகழ்ச்சிகளும் நிறைவுக்கு வந்தன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது