“கனடிய முதலீட்டாளர்கள் இலங்கையில் தொழில்களை ஆரம்பிக்கும் போது அங்கிருந்து கனடாவிற்கு ஏற்றுமதி அதிகரிக்க இலங்கையில் வேலை வாய்ப்புக்களும் உருவாகும்”
கனடா வாழ் இலங்கை வர்த்தக அமைப்பு நடத்திய கலந்துரையாடலில் இலங்கைக்கான கனடிய உயர் ஸ்தானிகர் Eric Walsh தெரிவிப்பு
“கனடா வாழ் முதலீட்டாளர்கள் இலங்கையில் தொழில்களை ஆரம்பிக்கும் போது அந்த முதலீடுகள் மூலம் உற்பத்தி பெருகி. அங்கிருந்து கனடாவிற்கு ஏற்றுமதி அதிகரிக்க இலங்கையில் வேலை வாய்ப்புக்களும் உருவாகும். அழகியதும் நல்ல வளங்கள் நிறைந்ததுமான இலங்கையை மீண்டும் சகஜ நிலைக்கு கொண்டு வர வெளிநாட்டு முதலீடுகள் பக்கபலமாக அமையும்”
இவ்வாறு. கனடா வாழ் இலங்கை வர்த்தக அமைப்பு இன்று பிற்பகல் நடத்திய இலங்கையில் முதலீடு செய்தல் என்ற தலைப்பில் நடத்திய கலந்துரையாடலில் உரையாற்றிய இலங்கைக்கான கனடிய உயர் ஸ்தானிகர் Eric Walsh அவர்கள் தெரிவித்தார். கனடா வாழ் இலங்கை வர்த்தக அமைப்பின் தலைவர் குலா செல்லத்துரை அவர்கள் மேற்படி கலந்துரையாடலுக்கு தலைமை தாங்கி ஆரம்ப உரையாற்றினார். அத்துடன் இலங்கைக்கான கனடிய உயர் ஸ்தானிகர் Eric Walsh அவர்களையும் அறிமுகம் செய்தார். உயர் ஸ்தானிகள் விடுமுறையைக் கழிக்க கனடாவிற்கு வந்திருந்தாலும் நேரத்தை ஒதுக்கி எமது அழைப்பை ஏற்று வருகை தந்தமைக்கும் நன்றி தெரிவித்தார்.
தொடர்ந்து அங்கு உரையாற்றிய இலங்கைக்கான கனடிய உயர் ஸ்தானிகர் Eric Walsh அவர்கள் பின்வருமாறு தனது உரையை ஆரம்பித்து கருத்துக்களைப் பகிர்ந்;து கொண்டார்.
” நான் கடந்த 2022 ம் ஆண்டு இலங்கைக்ககான உயர் ஸ்தானிகராக நியமனம் செய்யப்பெற்றபோது, நான் கனடாவில் சந்தித்த பலர் என்னிடம் கேட்டுக் கொண்டது இதுதான். நீங்கள் கொழும்பில் மட்டுமே இருந்து வேலை செய்யாதீர்கள். வடக்கு கிழக்கு மற்றும் இலங்கையின் அனைத்துப் பகுதிகளுக்;கு சென்று அங்குள்ள மக்களைச் சந்தியுங்கள். பின்னர் அவர்களின் உள்ளக்கிடக்கைகளை கேட்டு அறிந்து கொள்ளுங்கள். இதனால் அவர்களின் தேவைகளை அறியக்கூடியதாக இருக்கும். என்றார்கள்.
அவர்களின் வேண்டுகோளுக்கு ஏற்ப நான்மிகக் குறுகிய காலத்தில் பல இடங்களுக்கு பயணங்களை மேற்கொண்டேன். இலங்கையில் வளமான பிரதேசங்களைக் கண்டு ஆச்சரியப்பட்டேன்.
நான் அறிந்த வகையில் இலங்கை சுதந்திரமடைந்து சில காலம் வரைக்கும் அங்கிருந்த உள்நாட்டு அரசியல் வாதிகள் மக்களுக்கு பாதிப்புக்கள் ஏற்படாமல் சேவையாற்றியுள்ளார்கள். ஆனால் நாட்கள் செல்லச் செல்ல அங்கு இனப்பிரச்சனையும் பொருளாதாரப் பிரச்சனையும் அதிகரித்து இலங்கை வங்குரோத்து நிலைக்குச் சென்றது. எனவே இந்த நிலையை நிமிர்த்துவதற்கு கனடா போன்ற நாடுகளில் உள்ள முதலீட்டாளர்களின் வருகை அவசியமாகின்றது.
எனினும் அவ்வாறு முதலீடு செய்பவர்கள் தங்கள் தங்கள் சொந்த முயற்சி மற்றும் கவனிப்பு ஆகிவற்றை ஆகியவற்றில் அக்கறை செலுத்துவது மிகவும் அவசியம்’ என்றார்.
தொடர்ந்து உரையாடல்களும் இடம்பெற்றன. கனடா வாழ் வர்த்தகப் பிரமுகர் கணேசன் சுகுமார் அவர்களிடம் உரையாடியதன் மூலம் Eric Walsh அவர்கள் அதிக தகவல்களைப் பெற்றுக் கொண்டார்.
செய்தியும் படங்களும் – சத்தியன்