ஐரோப்பிய நாடான ஸ்வீடனில் உடலுறவை ஒரு போட்டியாக அங்கீகரித்து அந்நாட்டில் அதற்கென போட்டி ஒன்றை நடத்தவுள்ளனர். பொதுவாகவே பாலியல் சார்ந்து விவகாரங்களை ரகசிய கருத்துக்களாக பகிர்வதும் பேசுவதுமே இந்தியா போன்ற நாடுகளில் வழக்கம். மேற்கத்திய நாடுகளில் தான் இந்த விவகாரங்களை இயல்பான ஒன்றாக பேசி விவாதிப்பதுடன் புதுமையான சில நடவடிக்கைகளிலும் ஈடுபடுவார்கள்.
அப்படித்தான் ஐரோப்பிய நாடான ஸ்வீடன் ஒரு புதுமையான போட்டி ஒன்றை அந்நாட்டில் நடத்தப்போகிறது. அந்நாட்டில் உடலுறவு ஒரு விளையாட்டாக அங்கீகரிக்கப்பட்டு, ஐரோப்பிய செக்ஸ் சாப்பியன்ஷிப் என்ற போட்டி நடைபெறவுள்ளது. செக்ஸை ஒரு விளையாட்டு போட்டியாக நடத்தும் முதல் நாடு ஸ்வீடன் தான். இந்த போட்டி வரும் ஜூன் 8ஆம் தேதி தொடங்குகிறது.
இந்த போட்டிக்கு பார்வையாளர்கள் மற்றும் நடுவர்கள் இருப்பார்கள் என போட்டியை நடத்தும் ஸ்வீடன் செக்ஸ் பெடரேஷன் தெரிவித்துள்ளது. போட்டியில் 70 சதவீத வாக்குகளை பார்வையாளர்கள் அளிப்பார்கள் என்றும், 30 சதவீத வாக்குகளை நடுவர்கள் அளிப்பார்கள் என்றம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த போட்டிகள் பல வாரங்கள் நடக்குமாம். போட்டியில் பங்கேற்கும் நபர்களுக்கு துணையை கவர்தல், உடல் மசாஜ், ஓரல் செக்ஸ், உடலுறவு, சகிப்புத்தன்மை உள்ளிட்ட 16 பிரிவுகளில் போட்டி நடத்தப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
தினமும் சுமார் 6 மணிநேரம் வரை போட்டியில் கலந்து கொள்ள தேவைப்படலாம் என்று விதிகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டியில் பங்கேற்க 20 பேர் விண்ணப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டி அறிவிப்பு வெளியானதில் இருந்தே இணையத்தில் வேகமாக பரவி பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. நெட்டிசன்கள் பலர் இதை ஜாலியாக பார்த்து கிண்டலான கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர். அங்காங்கே இதற்கு எதிர்ப்பு குரல்களும் கிளம்பியுள்ளது.