முல்லைத்தீவு , மல்லாவி வடகாடு காட்டு பகுதி ஒன்றிலிருந்து இன்று காலை சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது
நேற்றைய தினம் வயலுக்கு சென்ற குறித்த நபரை காணவில்லை என உறவினர்கள் தேடிய போதே சடலமாக அடையாளம் காணப்பட்டுள்ளார்
கொல்லவிளாங்குளம் வவுனிக்குளம் பகுதியை சேர்ந்த 4 பிள்ளைகளின் தந்தையான இராசையா சிவகுமார் (52) என்பவரே சடலமாக மீட்கப்பட்டவராவார்
இன்று சம்பவ இடத்திற்கு வருகைதந்த மாவட்ட பதில் கடமை நீதவான் உடற்கூற்று பரிசோதனையின் பின்னர் சடலத்தை உறவினர்களிடம் கையளிக்குமாறு பொலிசாருக்கு பணித்திருந்தார்
குறித்த குடும்பஸ்தர் யானையின் தாக்குதலில் இறந்திருக்கலாம் எனவும் யானை தாக்கியதற்கான அடையாளங்கள் சடலத்தில் காணப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்