மன்னார் நிருபர்
15.06.2023
மன்னார் முருங்கன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இசைமாலைத்தாழ்வு பகுதியில் நேற்று புதன்கிழமை(14) வாகனம் ஒன்று முழுமையாக பற்றியெறிந்த நிலையில் சாரதி மற்றும் உதவியாளர் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளனர்.
மன்னார் -மதவாச்சி பிரதான வீதி இசைமாலைத்தாழ்வு பகுதியில் வியாபார பொருட்களுடன் மன்னார் நோக்கி பயணித்த சிறிய பட்டா ரக வாகனத்தின் இஞ்சின் பகுதி திடீரென தீப்பற்றிய நிலையில் வாகன சாரதி மற்றும் உதவியாளர் துரித கதியில் வாகனத்தில் இருந்து வெளியேறி வாகனத்தில் இருந்த பொருட்களையும் அகற்றி உள்ளனர்.
வெளியேறிய சற்று நேரத்தில் வாகனம் முழுவதும் தீ பரவல் ஏற்பட்டும் முழுமையாக வாகனம் எரிந்து நாசமாகியுள்ளது டன் சாரதியும் உதவியாளரும் எந்தவித காயங்களும் இன்றி உயிர் தப்பியுள்ளனர்
குறித்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை முருங்கன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்