கனடாவில் நீண்ட காலமாக இயங்கிவரும் மானிப்பாய் இந்துக் கல்லூரி- மானிப்பாய் மகளிர் கல்லூரி இணைந்த பழைய மாணவர்கள் சங்கம் நடத்திய 30வது ஆண்டு ‘பொங்கும் பொழுது விழா’ கடந்த 11-06-2023 அன்று மாலை ஸ்காபுறோ தமிழிசைக் கலா மன்ற கலாச்சார மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.
பிரதம விருந்தினராக கல்லூரி பழைய மாணவரும் வர்த்தகப் பிரமுகருமான தனா மாணிக்கவாசகர் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.
பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் உரைகளும் விழாச் சஞ்சிகை வெளியீடு ஆகியனவும் நேர்த்தியாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
மன்றத்தின் தற்போதைய தலைவர் ராஜ் கனகராஜா உபுதலைவர் ச. வசந்தராஜன். மற்றும் செயலாளர் செ. பார்த்திபன் இவர்களோடு சேர்ந்து செயற்குழு உறுப்பினர்கள் நண்பர்கள் என அனைவரும் இணைந்து விழாவை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.
அங்கு உரையாற்றிய தனா மாணிக்கவாசகர் அவர்கள் தனது உரையின்போது மானிப்பாய் இந்துக் கல்லூரியின் பல சிறப்புக்களை எடுத்துக் கூறினார். அந்தக் கல்லூரி உருவாக்கிய பல்துறை விற்பன்னர்களையும் கல்வியாளர்களையும் பாராட்டி தனது வாழ்விலும் முன்னேற்றம் காண்பதற்கு மானிப்பாய் இந்துக் கல்லூரி வழிகாட்டியது என்றும் தெரிவித்தார்.
செய்தியும் படங்களும்: சத்தியன்




























