கனடியத் தலைநகர் ஒட்டாவாவில் தனது கட்சி ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ
Canada’s Prime Minister Trudeau addressed a large crowd at a Laurier Club donor appreciation event at the Canadian War Museum in Ottawa on last Monday.
He started his speech by wishing the audience and mentioned that his Government and Party get support from Canadian younger generation and they keep joining Laurier Club, which is the strong financial base for the Liberal Party of Canada.
கனடியத் தலைநகர் ஒட்டாவாவில் கடந்த திங்கட்கிழமையன்று யுத்த காட்சிசாலை மண்டபத்தில் தனது கட்சி ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மிகுந்த உ ற்சாகத்தோடு காணப்பட்டார். அங்கு கூடியிருந்த கட்சியின் ஆதரவாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் ஆகியோர் மத்தியில் அவர் உரையாற்றும் போது தமது அரசாங்கத்திற்கும் லிபரல் கட்சிக்கும் இளைய சமுதாயத்தின் ஆதரவு பெருகி வருவதாகக் குறிப்பிட்டார்.
மேற்படி வைபவத்தில் கலந்து கொள்வதற்காக ஒட்டாவா தலைநகர் சென்றிருந்த ஸ்காபுறோ லத்திகா நகை மாளிகை உரிமையாளர் சசிகுமார் -பிரியா தம்பதி மற்றும் உதயன் லோகேந்திரலிங்கம் தம்பதி ஆகியோரோடு பிரதமர் உரையாடி தனது வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொண்டார்.
இங்கே காணப்படும் படங்களில் கனடாவின் பாதுகாப்பு அமைச்சர் அனிற்றா ஆனந்த் மற்றும் குடிவரவு பிரஜா உரிமைகள் அமைச்சர்Honourable Sean Fraser, MP மற்றும் கனடாவின் பொது சேவைகள் மற்றும் கொள்முதல் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினரும் ‘கனடா உதயன்’ குடும்பத்தின் நெருங்கிய நண்பியுமான Dr. Helena Jaczek- (Minister of Public Services and Procurement) ஆகியோர் ஸ்காபுறோ லத்திகா நகை மாளிகை உரிமையாளர் சசிகுமார் -பிரியா தம்பதி மற்றும் உதயன் லோகேந்திரலிங்கம் தம்பதி ஆகியோரோடு எடுத்துக் கொண்ட படங்கள் இங்கு காணப்படுகின்றன.