ரொறன்ரோ மாநகரின் மேயர் தேர்தல்: ஒலிவியா சோ 34 சதவீதம் விருப்பு வாக்குகள் பெற்று முன்னணியில். அவருக்கே .. வெற்றி பெறும் வாய்ப்பு அதிகம் உளதாக பேச்சு!
ரொறன்ரோ மாநகரின் மேயர் தேர்தல்: ஒலிவியா சோ 34 சதவீதம் விருப்பு வாக்குகள் பெற்று முன்னணியில்.
அவருக்கே .. வெற்றி பெறும் வாய்ப்பு அதிகம் உள்ளது எனஅண்மையில் வெளியான கருத்துக் கணிப்புக்கள் தெரிவிக்கின்றன.

இவ்வாறான வெற்றி வாய்ப்புக்கள் அதிகமுள்ள ஒலிவியா சோ அவர்களுக்கு தமிழ் மக்களின் ஆதரைவை வேண்டி நடத்தப்பெற்ற மக்கள் சந்திப்பு கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று மாலை ஸ்காபுறோவில் உள்ள ;தமிழ்ப்பூங்கா’ அமைப்பின் கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது.
சந்திப்பு நிகழ்ச்சியை கல்விச் சபை உறுப்பினரும் அதன் உப தலைவருமான நீதன் சாண் அவர்கள் ஏற்பாடு செய்து தொகுத்து வழங்கினார். கனடா உதயன் குழுவினரும் அங்கு சமூகமளித்திருந்தனர்.
ஏராளமான தமிழ் பேசும் வாக்காளப் பெருமக்கள் அங்கு வந்திருந்து மேயர் வேட்பாளர் ஒலிவியா சோ அவர்களின் உரையைக் கேட்டு மகிழ்ந்தனர். தொடர்ந்து அவரிடம் கேள்விகளைக் கேட்டும் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டும் தங்கள் ஆதவைத் தெரிவித்தனர்.
இங்கே காணப்படும் படங்கள் அங்கு எடுக்கப்பட்டவையாகும்
























