உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள ‘மாமன்னன்’ படத்தை பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார். இதில் வடிவேலு, ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், ‘மாமன்னன்’ திரைப்படம் ‘பொன்னியின் செல்வன்’ முதல் பாகத்தை ஓவர் டேக் செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதாவது, ஒரு சில திரையரங்குகளில் ‘பொன்னியின் செல்வன்’ முதல் பாகத்தின் முதல் நாள் டிக்கெட் விற்பனையை ‘மாமன்னன்’ திரைப்படம் ஓவர் டேக் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
