வரலாற்று சிறப்புமிக்க பெற்ற நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தின் வருடாந்த பெருவிழாவின் பதின்நான்காவது திருவிழா ஆகிய முத்தேர் இரதோற்சவம் இன்று வெகு சிறப்பாக இடம்பெற்றது.
இவ் ஆலய கொடியேற்றம் 19.06.2023 அன்று இடம்பெற்று, பதினாறு தினங்கள் இடம்பெறவுள்ள மஹோற்சவத்தில் ஜுலை 03 ம் திகதியன்று தீர்த்தோற்சவமும், ஜுலை 04ஆம் திகதியன்று தெப்போற்சவமும் இடம்பெற்று அன்று மாலை கொடியிறக்கத்துடன் இனிதே மஹோற்சவம் நிறைவடையும்.
இதில் நயினாதீவு நாகபூசணி அம்மன், விநாயகர், முருகன், வள்ளி, தெய்வானை உள்ளிட்ட தெய்வங்கள் இரதத்தில் வீற்று பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
இதில் பல பாகங்களில் வருகைதந்து பக்தர்களின் பக்திபூர்வமாக அருள்கடாச்சத்தினை பெற்றுச்சென்றனர். அத்துடன் பக்தர்கள் தமது நேர்த்திக்கடன்களை நிறைவேற்றிக்கொண்டனர்.