நேற்றையதினம், 1ம் திகதி சனிக்கிழமை சுழிபுரம் வழக்கம்பரை அம்பாள் ஆலயத்தில், தலா 3000 ரூபா வீதம் 150 குடும்பங்களுக்கு ரூபா 4.5 லட்சம் பெறுமதியான உணவுப் பொதிகள், அவ்வூரில் வசிக்கும் வருமானம் குன்றிய மக்களுக்கு வழங்கி வைக்கப்பட்டன.
சித்தங்கேணி ஆன்மீக அறக்கட்டளையின் தலைவர் திரு ஜனார்த்தனன் அவர்களது தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வை, வழக்கம்பரை அம்பாள் அறக்கட்டளை மற்றும் சங்கரத்தை பத்திரகாளி அம்மன் அறக்கட்டளை ஆகியன இணைந்து ஏற்பாடு செய்தன.
பண்ணாகத்தைச் சேர்ந்த மறைந்த திரு செல்லையா சபாநாயகர் அவர்களை நினைவு கூருமுகமாக, ரொரோண்டோவில் வசிக்கும் அவரது குடும்பம் 600 கனேடிய டொலர்களை நன்கொடையாக வழங்கியது.
மேலே குறிப்பிட்டுள்ள நன்கொடையாளர்களுக்கு கூடுதலாக, பின்வருபவர்கள் தங்கள் அன்புக்குரியவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் பின்வரும் தொகைகளை வழங்கினர்.
அமெரிக்காவில் உள்ள திருமதி தனம் அகிலன் – அவரது பெற்றோருக்கு காணிக்கையாக ரூ 30,000, ஜேர்மனியில் உள்ள திரு விசுவலிங்கம் ஸ்ரீதரன் – அவரது பெற்றோருக்கு காணிக்கையாக 34,000, லண்டனில் உள்ள திரு ரவி திருச்செல்வம் தனது பெற்றோருக்கு காணிக்கையாக 40,000 ரூபாய், ஜேர்மனியில் உள்ள திரு. ஆசைமுத்து சுதாகரன் தனது இரு சகோதரிகள் மற்றும் பெற்றோருக்கு காணிக்கையாக ரூ.50,000, இது தவிர 150,000 ரூபா வழக்கம்பரை அம்பாள் அறக்கட்டளையில் இருந்து பெறப்பட்டது.