யாழ். வரலாற்றுச் சிறப்புமிக்க பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலய மகா கும்பாபிஷேகத்திற்கு எண்ணெய்காப்பு சாத்தும் முதல்நாள் நிகழ்வு இடம்பெற்றது.
கரும ஆரம்ப கிரியைகள் ஆரம்பிக்கப்பட்டு இன்று இனிதே எண்ணெய்காப்பு சாத்தும் நிகழ்வு இனிதே ஆரம்பிக்கப்பட்டது..
வரலாற்றுச் சிறப்புமிக்க பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலய மகா கும்பாபிஷேகம் எதிர்வரும் 07.07.2023 அன்று நடைபெறவுள்ளது.
எண்ணெய் சாத்தும் நிகழ்வு 04 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 8.00 மணியில் இருந்து 06 ஆம் திகதி வியாழக்கிழமை மாலை 3.00 மணி வரை இடம்பெறும். 07 ஆம் திகதி காலை 8.45 மணி முதல் 10.15 மணி வரை கும்பாபிஷேகம் இடம்பெறும்.
கும்பாபிசேகத்தை தொடர்ந்து 45 தினங்கள் மண்டலாபிசேகம் இடம்பெறும். ஆகஸ்ட் மாதம் 21 ஆம் திகதி கொடியேற்றத்துடன் வருடாந்த மகோற்சவம் ஆரம்பமாகும். வரலாற்றுச் சிறப்புமிக்க பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலய மகா கும்பாபிஷேக நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர்.
ஆலயத்திற்கு வருகைதரும் அடியார்களின் நன்மை கருதி யாழ். காரைநகர் இடையே போக்குவரத்துச் சேவையில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்துச் சபை மற்றும் தனியார் பேரூந்துச் சேவைகள் எதிர்வரும் 04 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை தொடக்கம் ஆலயத்தினூடாக சேவையை மேற்கொள்ளும் எனவும் போக்குவரத்துயினர் தெரிவித்துள்ளனர்.