தமிழ்நாடு அரசின் கலைக் கல்லூரிகளின் கௌரவ மேற்பார்வையாளராக அண்மையில் பதவியேற்ற பின்னர் கனடாவிற்கு வருகை தந்துள்ள நடனக் கலைஞர். ‘கலைமாமணி’ சாகிர் உசைன் அவர்களை தனது அலுவலகத்திற்கு அழைத்து பாராட்டிய கனடிய பாராளுமன்ற உறுப்பினர் சல்மா சாகிட் அவர்கள் தான் மாகாண அரசியலில் காலடி எடுத்து வைத்த காலத்திலேயே கனடாவிற்கு வந்து அற்புதமான தமிழர் கலையாம் பரத நாட்டியத்தை கற்பித்தும் மேடைகளில் நிகழ்ச்சிகளை வழங்கியும் தொடர்ச்சியாக இயங்கிக் கொண்டிருக்கின்ற தங்களை நான் பாராட்டாமல் இருக்க முடியாது’ என்று புகழாரம் சூட்டினார்.
நேற்று மாலை கனடா ஸ்காபுறோவில் அமைந்துள்ள சல்மா சாகிட் அவர்களது தொகுதி அலுவலகத்தில் இந்த சந்திப்பு நிகழ்ந்தது. அப்போது கனடா உதயன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லோகேந்திரலிங்கமும் உடனிருந்தார். அங்கு தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்ட சல்மா சாகிட் எம். பி அவர்கள் ”நான் தங்கள் நடன நிகழ்ச்சிகள் மற்றும் உரைகள் ஆகியவற்றை பல வருடங்களாக உதயன் பத்திரிகையின் மேடைகளில் பார்த்துள்ளேன். அவற்றை மக்கள் எவ்வாறு ரசித்து பாராட்டினார்கள் என்பதையும் நான் நேரில் ரசித்தேன். அவ்வாறன தங்களை மீண்டும் கனடிய மண்ணில் சந்திப்பதையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன்’ என்றும் கனடாவின் எம். பி சல்மா சாகிட் அவர்கள் தெரிவித்தார்.
படங்களும் செய்தியும் சத்தியன்- கனடா–