ஸ்வர்லயா இசைக் கல்லூரியின் ஸ்தாபகரும் குருவுமாகிய ஶ்ரீமதி ஜெயகாந்தினி சம்பந்தனின் மாணவ மாணவிகள் தங்கள் கர்நாடக இசைத் திறன்களை மேடையில் சமர்ப்பித்த 10 வது ஆண்டு விழா கடந்த 7ம் திகதி வெள்ளிக்கிழமையன்று சிறப்பாக நடைபெற்றது.
தமிழிசைக் கலாமன்றத்தின் மண்டபத்தில் நடைபெற்ற மேற்படி ஆண்டு விழாவில் சிறப்புப் பேச்சாளராக தமிழகத்தின் பிரபல வீணை வித்துவான் சி ஆர் எஸ் மூர்த்தி அவர்கள் அழைக்கப்பட்டிருந்தார்.
ஸ்வர்லயா இசைக் கல்லூரியின் மாணவ மாணவிகள் தாங்கள் குருவிடம் கற்ற இசையின் வித்துவங்களை மேடையில் நேர்த்தியாக சமர்ப்பித்தார்கள் என்றால் அது மிகையாகாது. அந்த மாணவர்களின் பாடல்களுக்கு பக்கவாத்தியம் வழங்குவதற்கு ஏனைய லய வாத்திய ஆசிரியர்கள் மற்றும் வயலின் வித்துவான்கள் ஆகியோருடைய மாணவ மாணவிகள் பக்கவாத்தியங்களை வாசித்து விழாவிற்கு மேலும் சிறப்புக்களைச் சேர்த்தனர்.
விழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக ஸ்வர்லயா இசைக் கல்லூரியில் இசை பயிலும் மாணவ மாணவிகள் அன்னையர்கள் வழங்கிய தமிழிசைப் பாடல்கள் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.