சமூகம் எங்கே போய்கொண்டு நிக்கின்றது.ஆனால் இன்னும் தட்டேந்திக்கு கொண்டு நிக்கின்ற சூழல் காணப்படுகின்றது என யாழ். பல்கலைக்கழக கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம் தெரிவித்தார்.
யாழ். பல்கலைக்கழக கலைப்பீட பேராசிரியராக கடமையாற்று உள்ள ரகுராமுக்கான கெளரவிப்பு 14.07.2023 அன்று நாச்சிமார் ஆலயத்தில் அருகாமையில் அமைந்துள்ள தனியார் விடுதியில் மூத்த பத்திரிகையாளர் சி.பாரதி தலைமையில் நடைபெற்றது.
இவ் நிகழ்வின் பிரதம அதிதியாக யாழ். பல்கலைக்கழக கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம் கலந்துகொண்டர். இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போது இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஊடகத்துறையில் நான் பல காலங்கள் இருந்து வந்தது பல அனுபவங்களை எடுத்துக்காட்டுகின்றது.
அதனை ஒப்பிட்டு பார்க்கும் போது எனக்கான ஒரு அடையாளத்தினை எடுத்துக்காட்டியது இந்த ஊடகம் தான். மேலும் ஊடகத்துறையில் இருந்த வேகமும் எனக்கான ஒரு அடையாளத்தினை எடுத்துக்காட்டியது..
இதற்காக கூட கீழே இருந்து மேலே படிப்படியாக உயர்வதற்கு காரணம் பத்திரிகைத்துறையும், தொலைக்காட்சி செய்திப் பிரிவாகவும் காணப்படுகின்றது.
இதில் எதற்காகவம் பின்நிற்பது இல்லை. எதனையும் என்றாலும் செய்வோம் என்ற நம்பிக்கைதான் எனக்குள் இருந்தது.
மாற்றங்களை மாற்றவேண்டிய தேவையிருக்கின்றது. அதுவும் பல்கலைக்கழக மாணவர்களுடன் கதைக்கும் போது இவ்வாறான எண்ணங்கள் எழுகின்றன.
ஊடகத்துறை என்பது எல்லோருக்கும் சாதகமான பாதைதான் இது. உங்களுடைய ஊடகத்துறையில் நேர்மையாக இருந்துகொள்ளுங்கள்.
நிறைய சொல்லவேண்டியதாக இந்த சமூகத்திற்கு இருக்கிறது. செய்யவேண்டியதாக இருக்கிறது. ஆனால் அது தற்போது நான் வகிக்கு பதவிநிலை இடையூறாக இருக்கிறது. இதில் இருந்து கதைத்தால் கதை வேறுமாதிரி போய்விடும் என்ற தயக்கம் தான்.
யாழ். பல்கலைக்கழகத்தின் கலைபீடம் என்பது இலங்கையின் நரம்பு மையமாக காணப்படுகின்றது. அதில் உங்களை எதிர்பார்க்கின்றது. நான் சமூகம் என்ற ஆசிரியர் கட்டுரையும் எழுதியிருக்கின்றேன். இன்று வடக்கு, கிழக்கு மாகாணத்தில் இருந்து வருகின்ற இளம்மாணவர்கள் அதிகம் அதனால் தான் அவர்களை நல்வழிப்படுத்துவோம்
என்றதுதான் எனது முழுநோக்கமாக இருக்கிறது.
சமூகம் எங்கே போய்கொண்டு நிக்கின்றது. ஆனால் இன்னும் தட்டேந்திக்கு கொண்டு நிக்கின்றது.
யாழ்ப்பாணத்திலே படித்த சமூகம் தட்டேந்தி வீதியில் நிக்கின்றாங்களா? ஆனால் யாழ். பல்கலைக்கழகத்தில் இரவு 11 மணியளவில் தட்டேந்தி சாப்பாடு கேட்கின்றளவு மாணவர்கள் இருக்கின்றார்கள்.
இதற்கு நாங்கள் அவர்களுக்கு உழைக்க, அல்லது கற்க கொடுக்கின்றமோ என்பதுதான் இன்றைய நிலை. முரண்பாடான சமூகத்தில் தான் வாழ்ந்துகொண்டு இருக்கின்றோம். இதற்காக கேட்கவேண்டியதை கேட்போம், உடைக்க வேண்டியதை உடைப்போம். அதன் ஊடாக மாணவர்களின் வளமான எதிர்காலம் சிறக்கும் என்றார்.