யாழ்ப்பாண கல்லூரியின் 1986ஆம் ஆண்டு க.பொ.த சாதாரணதர மாணவர்களின் பல மில்லியன் ரூபா நிதியியல், யாழ்ப்பாண கல்லூரியில் அமைக்கப்பெற்ற சூரிய மின் பிறப்பாக்கி இன்றையதினம் திறந்து வைக்கப்பட்டது.
புவி வெப்பமுறுதல், நாட்டில் தற்காலத்தில் ஏற்பபட்டுள்ள மின்சார பிரச்சினைகள் என்பவற்றுக்கு தீர்வு வழங்கும் முகமாக இந்த மின் பிறப்பாக்கி பொருத்தப்பட்டுள்ளது.
அத்துடன் பாடசாலையின் பழைய மாணவர் ஒருவர் இசையமைத்த பாடல் இறுவட்டும் வெளிடப்பட்டது.
இந்த நிகழ்வில் தென்னிந்திய திருச்சபையின் பேராயர் கலாநிதி பத்மதயாளன், கல்லூரியின் அதிபர் ருஷிரா குலசிங்கம், ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.