வேற்றுமைகளைக் கடந்து தமிழ் பேசும் மக்களாக அனைவரும் ஒன்றிணைய வேண்டும் – ரவூப் ஹக்கீம்
தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பல்வேறு பிரச்சினைகள் இருக்கின்றன. அவற்றை எல்லாம் கடந்த தமிழ் பேசும் மக்களாக ஒன்றிணைய வேண்டும் என இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தேசிய தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அமரர் சிவ சிதம்பரத்தின் நூறாவது பிறந்த தினமான நேற்று கரவெட்டி மகேசன் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரை நிகழ்த்தும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தலைவர் சிவா 100 எனும் மறைந்த பாராளுமன்ற உறுப்பினரும் பிரதி சபாநாயகருமான சிவசிதம்பரம் அவர்களது 100 வது பிறந்த நாள் நிகழ்வுகள் நேற்று மிக சிறப்பாக கரவெட்டி மகேசன் விளையாட்டுக் கழக மைதானத்தில் விழாக்குழு தலைவர் பேராசிரியர் கு.மிகுந்தன் தலைமையில் இடம்பெற்றது.
இதில் முதல் நிகழ்வாக அமரர் சிவசிதம்பரம் அவர்களுடைய உருவ படத்திற்கு மலர் மாலையினை வகரவெட்டி அபிவிருத்தி ஒன்றிய தலைவர் உபாலி பொன்னம்பலம் அணிவித்தார்.
தொடர்நது ஈகை சுடரினை அவரது புதல்வி திருமதி நிராஞ்சலி தேவராஜ் அவரது மருமகள் கமலினி சத்தியேந்திரன் ஆகியோர் ஏற்றினர்.
மங்கல விளக்கினை சட்டத்துறை பேராசிரியர் வீ.ரீ.தமிழ் மாறன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம் கே சிவாஜிலிங்கம், பாராளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரன், தமிழரசு கட்சி தலைவர் மாவை சேனாதிராசா, தமிழர் விடுதலை கூட்டணி தலைவர் வீ.ஆனந்தசங்கரி, மூத்த பத்திரிகையாளர் தனபாலசிங்கம்,, தில்லை நாதன், பேராசிரியர் சி.சிவலிங்கராசா, இந்தியாவிலிருந்து வருகைதந்த சென்னை உயர்நீதி மன்ற சட்த்தரணி, சென்னை பல்கலைக்கழக பேராசிரியர் உட்பட பலர் ஏற்றினர்.
தொடர்ந்து இறைவணக்கம் தமிழ் மொழி வாழ்த்து இடம் பெற்று மணணுக்காகவும், மக்களுக்காவும் மரணித்தவர்களுக்காக இரண்டு நிமிடம் அகவணக்கம் செலுத்தப்பட்டது.
வரவேற்ப்பு உரையினை அமரர் சிவசிதம்பரத்தின் உதவியாளராக இருந்த தங்க முகுந்தனும், தலமை உரையினை நிகழ்வின் தலைவரான பேராசிரியர் கு.முகுந்தன் நிகழ்த்தினார்.
அதனை தொடர்ந்து நினைவுரைகளை கரவெட்டி அபிவிருத்தி ஒன்றியத்தின் செயலாளர் இ.இராகவன் நிகழ்த்தியதை தொடர்ந்து அமரர் சிவா எனும் நூலை அவரது மகள் நிராஞ்சலி தேவராஜ் விருந்தினர்களுக்கு வழங்கிவைத்தார்.
தொடர்ந்துசிறப்புரைகளை சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலயயவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம், சட்டத்துறை பேராசிரியர் வீ.ரீ.தமிழ் மாறன், பேராசிரியர் சி.சிவலிங்கராசா, மூத்த பத்திரிகையாளர் வீ.தனபாலசிங்கம் ஆகியோர் நிகழ்த்தினர்.
ஏற்புரையினை அமரர் சிவசிதம்பரம் அவர்களுடைய புதல்வியார் நிராஞ்சலி தேவராஜ் நிகழ்த்தினார்.
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் கட்சி பிரமுகள்கள், கட்சிகளின் ஆதரவாளர்கள், பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.