RE/MAX Sri Lanka வில் வீடு விற்பனைத்துறை நிறுவனத்தை அறிமுகப்படுத்தியதன் மூலம் இலங்கையில் RE/MAX பிராந்திய உரிமையின் பெருமைக்குரியவராக விளங்கும் ரஜீவ் கோணேஸ்
கனடாவில் ரஜீவ் கோணேஸ்வரன் என்னும் நன்கு அறியப்பெற்ற வீடு விற்பனை முகவர் நிறுவன முதல்வர் 22 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்துடன் சிறப்பாக இயங்கிவரும் RE/MAX Community Inc நிறுவனத்தின் தலைவராகவும் , 10 ஆண்டுகளுக்கும் மேலாக RE/MAX Community Inc தரகர் மற்றும் உரிமையாளராகவும் உள்ளார். அவர் வீடு விற்பனைத் துறை மீது கொண்ட உள்ளார்ந்த பேரார்வம் மற்றும் மற்றவர்கள் தங்கள் கனவுகளை அடைய உதவுவதில் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு கொண்டவர், இதன் மூலம் ராஜீவ் கோணேஸ்வரன் அவர்கள் வீடு விற்பனைத் தொழில்துறையில் நம்பிக்கை நிறைந்த ஒரு வெற்றியாளராக திகழ்கின்றார்.
RE/MAX Hall of Fame என்னும் வகைக்குள் நுழைந்த முதல் இலங்கை ரியல் எஸ்டேட் நிறுவனமும், உலகளவில் RE/MAX உடன் இருக்கும் மிக நீண்ட இலங்கை ரியல் எஸ்டேட் நிறுவனமும் இவர்தான். கனடாவில் ஸ்காபரோ பிராந்தியத்தில் மிக உயர்ந்த செயல்திறன் கொண்ட RE/MAX அலுவலகங்களில் ஒன்றாக அவர் தனது நிறுவனத்தை வளர்த்துள்ளார். வீடு விற்பனைத் துறையில் தனது சிறந்த சாதனைகளுக்காக ரஜீவ் கோணேஸ்வரன் பல வருடங்களாக பல விருதுகளையும் அங்கீகாரத்தையும் பெற்றுள்ளார். அவர் தற்போது இரண்டு அலுவலகங்களை நிர்வகித்து வருகிறார், ஒன்று ஸ்கார்பரோவிலும் மற்றையது டர்ஹாம் பிராந்தியத்திலும் உள்ளது. இரண்டிலும் 200க்கும் மேற்பட்ட முகவர்களுடன். சிறந்த வாடிக்கையாளர் சேவையாற்றும் மற்றும் அர்ப்பணிப்பைப் பகிர்ந்து கொள்ளும் இசைவான எண்ணம் கொண்ட துறைசார்ந்த வல்லுனர்களின் குழுவாக தனது நிறுவனத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்கின்றார்.
ரஜீவ் கோணேஸ் அவர்கள் தனது தொழில் சார்ந்த வாழ்க்கை முழுவதும், பல்வேறு வீடு விற்பனைத்துறை சுழற்சி முறைகளை வழிநடத்தினார், வளர்ந்து வரும் வீடு விற்பனையாளரின் சந்தைவாய்ப்பு முதல் சவாலாக விளங்கும் வீடு மற்றும் சொத்துக்கள் வாங்குபவர்களின் சந்தைகள் வரை, எல்லா நிலைகளிலும் தனது அனுசரிப்பு மற்றும் நிபுணத்துவத்தை வெளிப்படுத்தினார். அவர் நீடித்த உறவுகளை உருவாக்குவதிலும், ஒவ்வொரு வாடிக்கையாளர் மற்றும் முகவர்களிடமும் மிகுந்த அக்கறையுடனும் மரியாதையுடனும் நடந்து கொள்வதே சிறந்தது என்றும் தொடர்ச்சியாக நம்பி வருகின்றார்.
அவரது தொழில் வாழ்க்கைக்கு வெளியே, ரஜீவ் கோணேஸ் அவர்கள் தனது சமூகத்தில் ஒரு செயலூக்கம் கொண்டவராகவும் விளங்குகின்றார். அத்துடன் பல்வேறு முயற்சிகளில் பங்கேற்று, உள்ளூர் தொண்டு நிறுவனங்களை ஆதரிப்பவர்களில் ஒருவராகவும் திகழ்கின்றார்.
தற்போது ஒரு புதிய முயற்சியாகவும், தனது வீடு விற்பனைத்துறை மீதான ஆர்வமாகவும், ரஜீவ் கோணேஸ் தற்போது RE/MAX Sri Lanka என்னும் வீடு விற்பனைத்துறை நிறுவனத்தை தற்போது அறிமுகப்படுத்தியுள்ளார். அவர் இலங்கையில் RE/MAX பிராந்திய உரிமையின் பெருமைக்குரிய உரிமையாளராகவும் விளங்குகின்றார். இது அவரது தொடர்ச்சியான வளர்ச்சி மற்றும் வெற்றிப் பயணத்தில் குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் எட்டியுள்ளது என்பதற்கு அடையாளமாகும். இந்த முயற்சியானது பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கும், புதிய வேலை வாய்ப்பை வழங்குவதற்கும், தான் பெற்றவற்றை நாட்டிற்கு திரும்பக் கொடுப்பதற்கும் உதவும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது
இதன் மூலம் நமது சமூகத்தில் ஒரு சாதனையாளராக திகழழும் ரஜீப் கோணேஸ்வரன் அவர்களை நாம் அனைவரும் வாழ்த்துவோமாக!