சமிக்ஞையை மீறி செல்கின்றனர். இதன் காரணமாகவே பல உயிர்கள் காவுகொள்ளப்படுகின்றது. இதன் காரணமாகவே பல உயிர்கள் காவுகொள்ளப்படுகின்றது என கிளிநொச்சி புகையிரத நிலைய அதிபர் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
கடந்த 13.07.2023 தொடக்கம் 5 மாதங்களின் பின்னர் மீண்டும் புகையிரத சேவை மீண்டும் வழமைபோல் ஆரம்பித்துள்ளது.
இந்நிலையில் தற்பொழுது புகையிரதக் கடவையில் புகையிரதம் வருவதாற்கான சமிக்கை காட்டப்பட்ட நிலையிலும், மக்கள் அதனை பொருட்படுத்தாது சமிக்கையை மீறி செல்கின்றனர்.
இதன் காரணமாகவே பல உயிர்கள் காவுகொள்ளப்படுகின்றது. எனவே மக்கள் மிகவும் விழிப்புடன் செயல்ப்பட வேண்டும் எனவும், வீதி சமிக்கைகளை மதித்து புகையிரதம் செல்லும்வரை சில நிமிடங்கள் தாமதித்து செல்வதன் மூலம் உயிர்சேதம், பொருட்சேதம் என்பவற்றை தவிர்த்துக் கொள்ளமுடியும் எனவும் அவர் தெரிவித்தார்.