40 வருட காலமாக அரசியல் அமைப்பில் ஏற்படுத்தப்பட்ட 13 வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதில் நடைமுறை சிக்கல் என்ன இருக்கிறது என்பதை தெளிவாக கூறினால் அது பற்றி பேசுவோம் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனா கூறியதாக சுதந்திர கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்.
புதன்கிழமை ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற சர்வ கட்சி மாநாட்டில் கலந்து கொண்ட பின் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செய்தி குறிப்பிலே அங்கஜன் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற சர்வ கட்சி மாநாட்டில் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனாவும் நானும் கலந்து கொண்டோம்.
குறித்த மாநாட்டில் பல்வேறு விடயங்களைப் பற்றி ஆராய்ந்த நிலையில் 13 வது திருத்தத்தை அமுல்படுத்துவது தொடர்பில் விரிவாக பேசப்பட்டது.
பொலிஸ் அதிகாரத்தை தவிர ஏனைய அதிகாரங்களை வழங்க முடியும் என ஜனாதிபதி தெரிவித்த நிலையில் பொலிஸ் அதிகார வழங்குவது தொடர்பில் பாராளுமன்றத்தில் முடிவெடுப்பதாக தெரிவித்தார்.
இதன்போது கருத்து தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி மாத்திரிபால சிறிசேன, பதின்மூன்றாவது திருத்தம் தொடர்பில் நாம் பேசிக் கொண்டிருக்கின்ற நிலையில் ஏற்கனவே அது அரசியலமைப்பில் சட்டமாக்கப்பட்டுள்ளது.
13 வது திருத்தத்தில் என்னென்ன விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட வேண்டும் என தெளிவானதும் இறுதியான விடயங்களை கட்சித் தலைவர்களுக்கு வழங்கினால் அது தொடர்பில் கருத்துக்களை முன்வைக்க முடியும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டதாக அங்கஜன் மேலும் தெரிவித்தார்.