ஸ்காபரோ -கில்ட்வுட் மற்றும் கனாட்டா – கார்லேடன் தொகுதிகளின் வாக்காளர்கள் நேற்று நடைபெற்ற இடைத்தேர்தல்களில் ஒன்ராறியோ லிபரல் வேட்பாளர்களான அண்ட்ரியா ஹேசல் மற்றும் கரேன் மக்கிரிம்மன் ஆகியோர் வெற்றிபெற்றனர்
ஸ்காபரோவில் – கில்ட்வுட் மற்றும் கனாட்டா-கார்லேடன் தொகுதிகளின் வாக்காளர்கள் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற இடைத்தேர்தல்களில் முறையே ஒன்ராறியோ லிபரல் வேட்பாளர்களான அண்ட்ரியா ஹேசல் மற்றும் கரேன் மக்கிரிம்மன் ஆகியோரை மாகாண நாடாளுமன்றத்தின் புதிய உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுத்துள்ளனர். இதன் மூலம் ஒன்றாரியோ மாகாணத்தின் தற்போதைய ஆளும் கட்சியான கொன்சர்வேர்ட்டிவ் கட்சிக்கு ஒரு அதிர்ச்சியையும் இந்த தேர்தல் முடிவுகள் ஏற்படுத்தியுள்ளன என்றும் அறியப்படுகின்றது
Scarborough-Guildwood மற்றும் Kanata-Carleton ஆகிய தொகுதிகளின் வாக்காளர்கள், ஒன்ராறியோ லிபரல் வேட்பாளர்களான Andrea Hazell மற்றும் Karen McCrimmon ஆகியோரை அவர்களது புதிய மாகாண பாராளுமன்ற உறுப்பினர்களாக (MPP) தேர்ந்தெடுத்துள்ளமை தொடர்பாக ஒன்றாரியோ லிபரல் கட்சி ஆதரவாளர்கள் மற்றும் கட்சியின் தலைவர்கள் ஆகியோர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
லிபரல் கட்சியின் வேட்பாளர்கள் இரண்டு தொகுதிகளிலும் பெற்ற வெற்றிகளால் ஒன்றாரியோ லிபரல் கட்சி மேலும் தனது செல்வாக்கை அதிகரிக்கக் கூடிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கட்சியின் ஆதரவாளர்கள் கனடா உதயனுக்குத் தெரிவித்தார்கள், நடந்து முடிந்த தேர்தல்களில் ஹேசல் ஸ்கார்பரோ-கில்ட்வுட் தொகுதியில் வெற்றியை தட்டிக் கொண்டார். அத்துடன் மெக்கிரிம்மன் நீண்ட காலமாக கொன்சர்வேர்ட்டிவ் கட்சி தனது கைகளில் வைத்திருந்த தொகுதியை ஒன்றாரியோ லிபரல் கட்சி கைப்பற்றியுள்ளது.
தேர்தல் முடிவுகள் வெளியானதும் “குயின்ஸ் பார்க்கில் பாராளுமன்றத்தில் எங்கள் லிபரல் கட்சிக்கு கிடைத்த வெற்றியானது வலுவான குரலாக என்னை நம்பியதாகவே நான் கருதுகின்றேன். ஸ்கார்பரோ-கில்ட்வுட்டில் வசிப்பவர்களுக்கு நான் நம்பமுடியாத அளவிற்கு நன்றியுள்ளவனாக இருக்கிறேன்” என்றும் வெற்றி பெற்ற லிபரல் வேட்பாளர் ஹேசல் கூறினார். அத்துடன் அவர் மேலும் தெரிவிக்கையில் “ஒன்டாரியோ லிபரல் கட்சிக்கு ஸ்கார்பரோவை ஆதரித்தவர்களுக்காகசுவும் , உழைக்கும் மக்களுக்காகவும், அவர்களின் குடும்பங்களுக்காகவும், சுகாதாரத்திற்காகவும் மற்றும் கல்விக்காகவும் ஒவ்வொரு நாளும் போராடுவதற்கு நான் உறுதிபூண்டுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.
“குயின்ஸ் பார்க் பாராளுமன்றத்தில் உங்கள் குரலாக இருக்கவும், உங்களுக்காகவும், உங்கள் குடும்பத்தினருக்காகவும், எங்கள் முதியவர்களுக்காகவும், எங்கள் சமூகத்திற்காகவும் போராடுவதற்காகவே நான் இந்தப் போட்டியிட்டேன்” என்று வாக்காளர்கள் மத்தியில் உரையாற்றிய மெக்கிரிம்மன் “கனாடா-கார்லேட்டன் தொகுதியில் எங்கள் லிபரல் கட்சி MPP ஆக மீண்டும் சேவை செய்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன், என்றார்
நேற்றிரவு முடிவுகள் ஒரு தெளிவான செய்தியை அனுப்பிவைத்துள்ளன: ஒன்ராறியோ லிபரல் கட்சியினர் மட்டுமே இந்த மாகாணத்தை தவறாக நிர்வகிக்கும் கொன்சர்வேர்ட்டிவ் கட்சியினரை தோற்கடிக்க முடியும். இன்றைய வெற்றிகள் தெளிவான வேகத்தையும் 2026 இல் டக் போர்ட் அவர்களது கொன்சர்வேடிவ் அரசாங்கத்தை தோற்கடிப்பதற்கான பாதையையும் எமக்கு காட்டுகின்றன என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த வெற்றிகள் தொடர்பாக ஒன்றாரியோ லிபரல் கட்சியின் இடைக்காலத் தலைவர் ஜான் ஃப்ரேசர் கூறுகையில் .”அண்ட்ரியா மற்றும் கரேன் நிரூபிக்கப்பட்ட வெற்றியாளர்கள், அவர்கள் எப்போதும் தங்கள் சமூகங்களுக்கு ஒரு தலைமத்துவத்தைக் கொண்டவர்களாக உள்ளனர். ஒன்டாரியோ அரசாங்கத்தில் குழப்பம் மற்றும் இல்லாத தலைமைக்கு மத்தியில், குயின்ஸ் பார்க் பாராளுமன்றத்தில் அண்ட்ரியா மற்றும் கரேன் ஆகியோர் எங்களுக்குத் தேவைப்படுகிறார்கள், மேலும் அவர்களை எங்கள் புதிய உறுப்பினர்களாக வரவேற்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.” என்றும் தெரிவித்துள்ளார்