ஒட்டாவாவில் உள்ள கனடாவின் கடுகதி நுழைவுத் திட்டத்தின் செயலகமானது தற்போது முக்கியமான துறைகளில் நிபுணத்துவம் பெற்றகளுக்கு ஒரு நெறிப்படுத்தப்பட்ட மற்றும் திறமையான பாதையை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. வர்த்தகத்தில் மற்றும் தொழில்துறை வல்லுனர்கள் மற்றும் அனுபவமுள்ள திறமையானவர்களின் விண்ணப்பங்களுக்கு முன்னுரிமைவஅளிப்பதன் மூலம், கனடாவின் திறமைக்கான அதிகரித்து வரும் தேவையை பூர்த்தி செய்வதையும் நாட்டின் பொருளாதார வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கு பங்களிக்கும் முக்கிய பதவி வெற்றிடங்களை நிரப்புவதையும் நோக்கமாகக் கொண்டு இயங்கவுள்ளது.
2023 மே 31 அன்று, குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமை அமைச்சராக இருந்த கெளரவ சீன் ஃப்ரேசர், வகை அடிப்படையிலான தேர்வு மூலம் கடுகதி நுழைவுக்கான மாற்றங்களை அறிவித்தார். இந்த மாற்றங்கள் குறிப்பிட்ட பணி அனுபவம் அல்லது பிரெஞ்சு மொழி திறன் கொண்ட விண்ணப்பதாரர்களை நிரந்தர குடியிருப்புக்கு விண்ணப்பிப்பதன் மூலம் அடையாளம் காணப்பட்ட பொருளாதார இலக்கை ஆதரிக்கும் தொழிலாளர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய உதவுகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.
அதேவேளை இன்று, குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமைக்கான புதிய அமைச்சரான மாண்புமிகு மார்க் மில்லர், வகை அடிப்படையிலான தேர்வுக்கான முதல் வர்த்தகச் சுற்று இந்த வாரம் திறக்கப்படும் என்று அறிவித்தார். தச்சுவேலை, நீர்க்குழாய்த் தொழில் மற்றும் கனடாவின் கட்டுமானத் துறைக்கு நாடு முழுவதும் தேவைப்படும் திறமையான தொழில் வல்லுனர்களை ஈர்க்க உதவும் என்றும்அவர் தெரிவித்தார்.
வகை அடிப்படையிலான தேர்வு, சிறந்த உலகளாவிய திறமைசாலிகளை ஈர்ப்பதற்கும், பொருளாதாரத்தை ஆதரிக்கும் வர்த்தகர்களின் தேவையைப் பூர்த்தி செய்வதற்கும் கனடாவின் அர்ப்பணிப்பைக் குறிக்கிறது. இந்த வகை அடிப்படையிலான தேர்வு சுற்றுகள், பொது அழைப்பிதழ் சுற்றுகளுடன் ஆண்டு முழுவதும் தொடரும் என்றும் மேலும் விவரங்கள் எதிர்வரும் வாரங்களில் அறிவிக்கப்படும் எனவும் அறியப்படுகின்றது
Canada announces the first-ever Express Entry invitations for
newcomers with experience in the trades
August 1, 2023—Ottawa—Canada’s Express Entry system is now tailored to provide a streamlined and efficient pathway for individuals with expertise in critical fields. By prioritizing the invitation of skilled newcomers with experience in the trades, Canada aims to meet the increasing demand for talent and fill key positions that contribute to the nation’s economic growth and advancement.
On May 31, the Honourable Sean Fraser, the previous Minister of Immigration, Refugees and Citizenship, announced changes to Express Entry through category-based selection. These changes help address labour shortages that support an identified economic goal by inviting candidates with specific work experience or French language ability to apply for permanent residence.
Today, the Honourable Marc Miller, the new Minister of Immigration, Refugees and Citizenship, announced the first trades round for category-based selection will open this week. This focus on candidates with trades expertise—including carpentry, plumbing, and welding—will help Canada’s construction sector attract the skilled talent it needs across the country.
Category-based selection signals Canada’s commitment to attract top global talent and help meet the need for tradespeople to support the economy. These category-based selection rounds will continue throughout the year, alongside general invitation rounds, and more details will be announced in the coming weeks.