அண்மையில் கனடாவின் ஜோர்ஜ் ரவுண் நகரத்தில் இடம்பெற்ற இளம் கர்நாடக சங்கீதக் கலைஞர் அவனீஷ் கிரிகரன் அவர்கள் தனது ‘அம்மம்மாவும்’இசையாசிரியையுமான ‘இசைக்கலைமணி’ பவானி ஆலாலசுந்தரம் அவர்களின் வழிகாட்டுதலில் பயின்று அற்புதமான தனது இசையரங்கேற்றத்தை அனைவருக்குமாக சமர்ப்பித்தார்.
அரங்கேற்றம் நடைபெற்ற தினத்தன்று அரங்கம் நிறைந்த மக்கள் கூட்டம் நிறைந்திருக்க சிவஶ்ரீ பஞ்சாட்சர கிருஷ்ணராஜக் குருக்களட அவர்கள் நடத்திய ஆரம்பப் பூசை மற்றும் அவரது ஆசியுடன் ஆரம்பித்த இசைக்கச்சேரி தொடக்கத்தில் இருந்து முடியும்வரை சபையினரின் பலத்தகரகோசத்தின் மத்தியில் மிகுந்த ஆவலோடு ரசித்த இசை ரசிகர்களின் ஆர்ப்பரிப்புடன் தொடர்ந்தது.
ஜோர்ஜ் ரவுணில் இத்தனை ரசிகப் பெரு மக்களா? என்று அதிசயக்கும் வகையில் அவனீஷ் கிரிகரன் என்ற இந்த 14வயது கர்நாடக இசைச் செல்வனின் அரங்கேற்றப்பெருவிழா கானடா ராக அடதாள வர்ணத்துடன் தொடங்கி வாதாபியில் நிரவல், கற்பனாசுரம், குறைப்பு போன்றவற்றுடன், அமோகமாக நகர்ந்து சென்றது அவனுடைய கற்பனைத்திறனை நினைக்கும் பொழுது மெய்சிலிர்த்தது. ஆனந்தக்கண்ணீரே வந்து விட்டது என்று கூடச் சொல்லலாம்.
. தொடர்ந்து தாயே திரிபுரசுந்தரி, கௌளை பஞ்சரத்தினத்தையும் இளம் கர்நாடக சங்கீதக் கலைஞர் அவனீஷ் கிரிகரன் அவர்கள் மிக அழகாகப் பாடினார். அடுத்து சண்முகப்பிரியா ராகாலாபனை, முருகா முருகா என்றபாடல் எல்லோரையும் பக்தியில் ஆழ்த்தியது. நிரவல், கற்பனைசுரம் மேலும் மெருகூட்டியது. மத்தியமாவதி ராக ஆலாபனை சரவணபவ என்ற சவுக்ககால கீர்ததனை நிரவல், குறைப்பு, அவருடையஇசைஞானத்தை சிறப்பாகக் காட்டியது. இந்தநேரத்தில் அவனீஷின் கடின உழைப்பை மெச்சவேண்டும். அடுத்து நளினகாந்தியில் மனவியாலகிஞ் மிகவும் விறுவிறுப்பாகவும், இனிமையாகவும் பாடி சபையோரை உற்சாகப்படுத்தினார் இளம் கர்நாடக சங்கீதக் கலைஞர் அவனீஷ் கிரிகரன் அவர்கள்.
அடுத்து மோகனராகம், தானம், பல்லவி இராகமாலிகைஸ்வரம் மிகஅழகாகவும், வெகுசிறப்பாகவும் பாடி சபையோரை ஆனந்தத்தில் மூழ்கச்செய்தார். அதற்கேற்ப பக்கவாத்திய கலைஞர்களின் கடினஉழைப்பும் சேர்ந்து மேலும் மெருகூட்டியது. அடுத்து என்ன பாடப்போகிறார் இவர் என்ற ரசிகர்களின் ஏக்கத்தைபோக்க சினம் அடையாதே, என்ற பாடல் இனிமையாகவும் இளைஞர்களிற்கு நல்ல தகவலை புகட்டுவதாகவும் அமைந்தது. மனமே கணமும், சின்னஞ் சிறுகிளியே மற்றும் பாரதியார் பாடலையும் பாடி சபையோரின் கரகோசத்தையும் பாராட்டையும் பெற்றார் அவனீஷ் கிரிகரன். தொடர்ந்து சிவரஞ்சனி தில்லானாவை விறுவிறுப்பாகப்பாடி மங்களத்துடன் கச்சேரியை நிறைவு செய்தானர் .
அவனீஷ் கிரிகரன்அவர்களின் குரல்வளமும், மனத்தைரியமும், சாந்தமான முகமும் எல்லோரையும் கவர்ந்தது. மாணவர்களும், பெற்றோர்களும் சேர்ந்து வந்தவர்களை ஒருவித குறையும்இல்லாமல் உபசரித்தார்கள் மேலும் பிரதமவிருந்தினரின் நுணுக்கமான இசை விளக்கங்களையும் மிக அவதானமாகக் கவனித்து முழு உருப்படிகளையும் பற்றி மிக அழகாக உரையாற்றினார். இவ்வளவு அழகாக விமர்சனம் செய்த இசைக் கலைஞர் GRS மூர்த்தி அவர்களை உண்மையில் பாராட்ட வேண்டும். மேலும். குருவான அவனீஷ் கிரிகரன்அவர்களின் குருவான ‘இசைக்கலைமணி’ பவானி ஆலாலசுந்தரம் அவர்களின் 40வருட சதாகான இசைக் கல்லூரியின் இசைப் பயணத்தில் இசைச் செல்வனின் அரங்கேற்றம் பெரிய சாதனை படைத்து விட்டது. என்றும் தொடர்ந்தும் அவனீஷ் கிரிகரன்அவர்களின் கர்நாடக இசைத்துறை முயற்சிகள் வளர வாழ்த்துகிறேன்.
இசைரசிகன்- மிசிசாகா