யாழ்ப்பாணம் – சாவகச்சேரி புனித லிகோரியார் தேவாலயத்தின் வருடாந்த திருநாள் திருப்பலி இன்று காலை இடம் பெற்றது.
தேவாலயத்தின் பங்குத்தந்தை அருட்பணி ஞானரூபன் அடிகளார் தலைமையில் இடம்பெற்ற திருநாள் திருப்பலியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டிருந்தார்கள்.
திருவிழா திருப்பலியை தொடர்ந்து லிகோரியாரின் திருச்சொருபம் தாங்கிய ஊர்தி ஆலயத்தில் இருந்து புறப்பட்டு கச்சாய் வீதி வழியாக கிராமத்தை சுற்றி ஆலயத்தை வந்தடைந்தது. இப்பவனியில் தேவாலய பங்கு மக்களும் கிராம மக்களும் கலந்துகொண்டிருந்தனர்.
























