(10-08-2023)
மன் சின்ன பண்டிவிரிச்சான் அ.த.க பாடசாலையில் கல்வி கற்கும் வறுமை கோட்டிற்கு உட்பட்ட தெரிவு செய்யப்பட்ட மாணவ மாணவிகளுக்கு காலணிகள் வழங்கும் நிகழ்வானது பாடசாலையின் அதிபர் லதிஸ்லாஸ் அமலானந்குமார் அவர்களினதும் பாடசாலை ஆசிரியர்களின் நெறிப்படுத்தலில் நேற்று காலை (9) நடைபெற்றது.
இன் நிகழ்வில் மன் புனித ஆனாள் கல்வி மற்றும் சமூக அபிவிருத்தி அமைப்பின் நிர்வாக சபை உறுப்பினர்கள் மற்றும் அங்கத்தவர்கள் பாடசாலை அதிபர் ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்ததாக புனித ஆனாள் கல்வி மற்றும் சமூக அபிவிருத்தி குழு வங்காலை சுவிட்சர்லாந்து இணைப்பாளர் திரு.சுனேஸ் சோசை தெரிவித்தார்.
மாணவர்களின் காலணிகளுக்கான செலவுத் தொகையை புலம்பெயர் உறவுகளும் வங்காலை ஆனாள் கல்வி மற்றும் சமூக அபிவிருத்தி அமைப்பும் வழங்கியிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது