கனடாவில் நிலவும் வீடுகள் தட்டுப்பாடு பிரச்சினையை சமாளிப்பதற்கு அனுபவம் நிறைந்த கட்டடத் தொழிலாளர்கள் மற்றும் தொழில் அறிந்தோர் அவசியமாகத் தேவை என்று தெரிவித்த கனடிய குடிவரவு அமைச்சர்
கனடாவுக்கு புதிதாக புலம்பெயர்ந்தோர் வராவிட்டால், கனடாவில் நிலவும் வீடுகள் தட்டுப்பாடு பிரச்சினையை சமாளிப்பது சாத்தியமேயில்லை என்று கூறியுள்ளார் கனடாவின் புதிய புலம்பெயர்தல் அமைச்சர்.Marc Miller கட்டடத் தொழிலாளர்கள் மற்றும் பொறியியலாளர்கள் ஆகியோர் அதிகளவில் தேவைப்படுகின்றனர் என்றும்தெரிவித்துள்ளார்.
கனடாவில் வீடுகள் பற்றாக்குறை பிரச்சினை புதிதாக புலம்பெயர்ந்து வருவோரால் அதிகரிப்பதாக சமீபத்தில் கனடா மத்திய வங்கி தெரிவித்திருந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.
இது குறித்து கனடாவின் புதிய குடிவரவு மற்றும் பிரஜாவுரிமைகள் அமைச்சராக பொறுப்பேற்றுள்ள Marc Millerஇடத்தில் கேள்வி எழுப்பிய ஊடகவியலாளர்கள், அதனால் கனடாவுக்கு புலம்பெயர்வோரின் எண்ணிக்கையைக் குறைக்கும் திட்டம் உள்ளதா என்றும் கேட்டார்கள்.
அந்தக் கேள்விக்கு” இல்லை” என பதிலளித்த அமைச்சர் Marc Miller, வெளிநாட்டிலிருந்து கனடாவுக்கு வரும் தொழில் திறன் கொண்ட பணியாளர்கள் இல்லையென்றால், இப்போது கனடாவில் நிலவும் வீடுகள் பற்றாக்குறைப் பிரச்சினையைத் தீர்க்கும் விடயத்தில் சவால்களை நாடு எதிர் கொள்ளும் என்றும் தெரிவித்தார். .
கனடாவிற்கு குடிவரவாளர்களாக வருபவர்களின் எண்ணிக்கையைக் குறைப்பது குறித்து மக்கள் கேட்கிறார்கள் என்றால் அதன் , அர்த்தம் வீடுகளைக் கட்டுவதற்காக தேவைப்படும் பணியாளர்கள் மற்றும் பொறியியலாளர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதா அல்லது குடும்பங்கள் இணைவதைத் தடுப்பதா, என்றும் அமைச்சர் பதிலளித்தார்.அப்படியென்றால் அது அவர்களுடைய மன நலனையும், ஏற்கனவே இங்கு வாழ்ந்து வரும் புதிய குடிலன்களை பாதிக்கும் என்று பதில் கேள்வியொன்றை பத்திரிகையாளர்களை நோக்கி எழுப்பினார் அமைச்சர். Marc Miller, .