ந.லோகதயாளன்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் குறுந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் ஆலயத்தில் இன்று பொங்கள் உற்சவம் இடம்பெறவுள்ள நிலையில் பதற்றமும் சூழ்ந்துள்ளதனால் பொங்கல் பொங்குமா என்ற கேள்வி எழுப்பப்படுகின்றது.
குறுந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் ஆலயத்தில் ஏற்கனவே பொங்கள் உற்சவம் இடம்பெற ஏற்பாடுகள் மேற்கொண்ட நிலையில் பொலிசாரும் தொல்லியல்த் திணைக்களமும் தடுத்து நிறுத்தியமையினால் பதற்றம் சூழ்ந்து பொங்கல் தடைப்பட்டு நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு பொங்குவதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளதனால் இன்று பொங்கல் ஏற்பாடு இடம்பெறுகின்றது.
இருந்தபோதும் இதனைத் தடுப்பதற்கு சிங்கள இனவாதிகள் அழைப்பு விடுத்த நிலையில் தெற்கில் இருந்து சிங்கள மக்களும் பௌத்த துறவிகளும. பேரூந்தில் அழைத்து வரப்படுகின்றனர்.
இதேநேரம் யாழ்ப்பாண பல்கலைக் கழக மாணவர்கள் உட்பட யாழ்ப்பாணத்தில் இருந்தும் பேரூந்துகளில் பக்தர்கள் காலையில் குறுந்தூர்மலை நோக்கி பயணித்துள்ளதோடு மாவட்டத்தில் இருந்தும் பலர் அங்கே பிரசன்னமாகியுள்ளனர்.
இருதரப்பும் ஓன்றுகூடும் அதேநேரம் படையினரும் பொலிசாரும் குவிக்கப்பட்டுள்ளதனால் இன்று பொங்கல் பொங்குமா என்ற கேள்வி எழுப்பப்படுகின்றது.