நதராசா லோகதயாளன்.
யாழ்ப்பாணம், ஓக.19
ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா நிறுவனத்தின் 2022ஆம் 2023ம் ஆண்டுக்கான நேர்மைக்கு மகுடம் விருதில் இம்முறை கோப்பாய், சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர்கள் உட்பட ஐவருக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற இந் நிகழ்வில்
நேர்மையுடனும் அர்ப்பணிப்புடனும் சிறந்த விழுமியங்களை கடைப்பிடித்து பொதுமக்களுக்கு சேவையாற்றும் அரச ஊழியர்களை அங்கீகரித்து கெளரவிக்கும் ஓர் தளமாக இந்நிகழ்வு இடம்பெற்றது.
பொதுமக்களுக்கு சேவை வழங்குவதை முதன்மையாக கொண்டு நேர்மையாகவும் தமது கடமைகளுக்கு மேலதிகமாக தம்மை அர்ப்பணித்து பணியாற்றும் நேர்மையான அரச ஊழியர்களை கண்டறியும் நேர்மைக்கு மகுடம் செயற்திட்டத்தினை எக்கவுண்டபிலிட்டி லெப் நிறுவனத்துடன் இணைந்து ஐந்தாவது முறையாக நிறுவனம் ஏற்பாடு செய்யப்பட்டது.
நேர்மைக்கு மகுடம் எனும் நேர்மையான அரச ஊழியர்களுக்கு விருது வழங்கும் முயற்சியானது நேபாளத்தில் ஆரம்பிக்கப்பட்டு பின்னர் இலங்கை உட்பட 12 நாடுகள் இவ்விருது வழங்கும் செயற்திட்டத்தினை நடைமுறைப்படுத்தி வருகின்றது.
இந்நிகழ்வின் போது சிறந்த ஐந்து அரச ஊழியர்களுக்கு இந்த நேர்மைக்கு மகுடம் 2022/23 விருதினை வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.
இதன்போது சுபாஜினி மதியழகன் வலிகாமம் கிழக்கு, கோப்பாய் ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா (TISL) நிறுவனமானது 2022/23ம் ஆண்டுக்கான இன்டக்ரிட்டி ஐக்கன் (நேர்மைக்கு மகுடம்) விருது வழங்கும் இறுதி விழாவினை இன்று (17) பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) நடாத்தியது.
நேர்மையுடனும் அர்ப்பணிப்புடனும் சிறந்த விழுமியங்களை கடைப்பிடித்து பொதுமக்களுக்கு சேவையாற்றும் அரச ஊழியர்களை அங்கீகரித்து கெளரவிக்கும் ஓர் தளமாக இந்நிகழ்வு திகழ்கிறது.
பொதுமக்களுக்கு சேவை வழங்குவதை முதன்மையாக கொண்டு நேர்மையாகவும் தமது கடமைகளுக்கு மேலதிகமாக தம்மை அர்ப்பணித்து பணியாற்றும் நேர்மையான அரச ஊழியர்களை கண்டறியும் இன்டக்ரிட்டி ஐக்கன் (நேர்மைக்கு மகுடம்) செயற்திட்டத்தினை எக்கவுண்டபிலிட்டி லெப் (Accountability Lab) நிறுவனத்துடன் இணைந்து ஐந்தாவது முறையாக TISL நிறுவனம் ஏற்பாடு செய்தது.
இன்டக்ரிட்டி ஐக்கன் (நேர்மைக்கு மகுடம்) எனும் நேர்மையான அரச ஊழியர்களுக்கு விருது வழங்கும் முயற்சியானது நேபாளத்தில் ஆரம்பிக்கப்பட்டு பின்னர் இலங்கை உட்பட 12 நாடுகள் இவ்விருது வழங்கும் செயற்திட்டத்தினை நடைமுறைப்படுத்தி வருகின்றது.
இந்நிகழ்வின் போது சிறந்த ஐந்து அரச ஊழியர்களுக்கு இன்டக்ரிட்டி ஐக்கன் (நேர்மைக்கு மகுடம்) 2022/23 விருதினை வழங்கி கெளரவிக்கப்பட்டனர். அவர்கள்:
1. சுபாஜினி மதியழகன் – பிரதேச செயலாளர், பிரதேச செயலகம் – வலிகாமம் கிழக்கு, கோப்பாய்
2. விஜயவர்தன அபேயவிக்ரம நிசங்க – வைத்தியர், மாவட்ட ஆதார வைத்தியசாலை – ரிகில்லகஸ்கட மற்றும் சுகாதார சேவைகள் அலுவலக மாவட்ட பணிப்பாளர் – நுவரெலியா
3. யசோதா உதயகுமார் – பிரதேச செயலாளர், பிரதேச செயலகம் – வலிகாமம் தென் மேற்கு, சண்டிலிப்பாய்
4. பிரதிபானி ஸ்ரீ விஜயந்தி மொல்லிகொட – தாதி, ஆதார வைத்தியசாலை – எல்பிட்டிய
5. நளின் பிரசன்ன விஜேசேகர – மேலதிக சுகாதார வைத்தியர், பொதுச் சுகாதார பணிமனை – அம்பலாங்கொடை
இவர்களுக்கு நினைவுச் சின்னங்கள் வழங்கி கெளரவிக்கப்பட்டனர். மேலும் அவர்களின் வாழ்க்கை கதையினை தனது சக ஊழியர்களுடன் பகிந்து அவர்களையும் ஊக்கப்படுத்தினர்.

இதேநேரம் குறித்த விருது கடந்த காலங்களில் யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் சத்தியமூர்த்தி மற்றும் யாழ்ப்பாணம் பிரதேச செயலாளர் சுதர்சன் ஆகியோருக்கு வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.