காரைக்கால் மீனவர்கள் தாக்கப்பட்டமையை கண்டிக்கும் வடக்கு மீனவர்கள்!
காங்கேசன்துறை கடற்பரப்பில் இடம்பெற்ற காரைக்கால் மீனவர்கள் மீதான தாக்குதலை கண்டிப்பதாக, முன்னாள் யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமசங்களின் சம்மேளன உப தலைவர் நா.வர்ணகுலசிங்கம் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் வடமராட்சி ஊடக இல்லத்தில் இன்று காலை 11:30 மணியளவில் இடம் பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
காரைக்கால் மீனவர்கள் மீதான தாக்குதல் இடம் பெற்றதாக ஊடகங்கள் வாயிலாக அறிந்தோம், இவ்வாறு யார் தாக்குதல் நடாத்தினாலும் அது தவறு. இதனை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்.
தாக்குதல் நடாத்தப்பட்டதாக சொல்லப்படும் படகு இலக்கம் வடக்கு கிழக்கு மீனவர்களது இல்லை ஏன்றும் யாழ்ப்பாணம் j எனவும், கிளிநொச்சி எனவும் முல்லைத்தீவு எனவும், மன்னார் எனவும் அடையாளப் படுத்தப்பட்டிருப்தபதாகவும் தெரிவித்தார்.
மேலும் எப்படியாவது கச்சதீவை மீட்டெடுப்பேன் ஏன இந்திய தமிழ நாடு முலலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்த கருத்தை ஏற்றுக் கொள்ள முடியாது எனவும், இது வடக்கு கிழக்கு மீனவர்கள் இருக்கும் வரை சாத்தியமில்லை எனவும் தெரிவித்ததுடன் தி.மு.க வினரே அதிகளவான விசைப்படகுகளை வைத்து எல்லைமீறிய மீன்பிடித்தலில் ஈடுட்டு வருவதாகவும், இலங்கை கடற்பரப்பில் மீன்வளங்களை அழித்து வருவதாகவும் குற்றம் சாட்டிய வரஸணகுலசிங்கம் முதலில் அவர்களை கட்டுப்படுத்துமாறும் தெரிவித்தார்.
இதேவேளை சீனாவிற்கு விஜயம் மேற்கொண்ட மீன்பிடி அமைச்சர் அங்கு என்ன ஒப்பந்தம் செய்து இங்குவந்து கடலட்டை பண்ணையாக இருந்தாலென்னெ அவற்றை செயற்படுத்த முடியாது என்றும் மீறி செயற்பட்டால் ஒட்டுமொத்த கடற்றொழில் சமூகமும் சேர்ந்து எதிர்க்கும் எனவும் தெரிவித்தார்.